22 வரலாற்று ஏடு ஒளி வீசியபோதே, ஆரியர் அந்நியர் என்பதும், அவர் தம்தொடர்பால், வரவால் தமிழர்வாழ்வு தாழ்ந்தது என்பதும் வலுப்பெறலாயின. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் பெற்றிருந்த வளமான வாழ்க்கை யும், வெற்றி நிலையும், அறிவாட்சியும் மக்களுக்குப் புலப் படத் தொடங்கின. அக்காலத்தில், மூவேந்தர் என்று சிறப்பிக்கப்பட்ட சேர, சோழ,பாண்டியர்கள், வில், புலி, கயல் பொறித்த கொடிகளை உயர்த்தி, தமிழகத்தை எவருக்கும் தலைவணங் காமல் ஆண்டுவந்தனர். அந்தப் பேரரசர்களில் பலர், ஆரியர் அகந்தையை அடக்கியவரும், இமயத்தின் பிடரி யில் தங்கொடி பொறித்தவரும், கங்கைக்கரையினில் வெற்றி முரசு முழங்கியவரும், கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தவரும், கலிங்கத்தைக் கைக் கொண்டவரும், கடாரத்திலும் காழகத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவரும், ஈழத்தை வென்றவரும் எனப் பரணி பாடும் பலதிறப்பட்ட புகழுக்கும் உரியவர்களாகத் திகழ்ந் தனர். இவற்றை அறியத்தொடங்கிய தமிழர்களின் தன்னம்பிக்கையும் உரிமை உணர்வும் சிறிது சிறிதாக வளரத்தொடங்கியது. எந்ள்ளும், எவ்வகையிலும் வேறு எந்த இனத்த வரினும் தாழ்வுறாத தமிழர்- திராவிட இனத்தவர், இன்று பலவகையினும் தாழ்ந்துள்ள நிலையை எண்ணலா யினர், ஏக்கமுங்கொண்டனர். இந்நிலைக்குக் காரணமான ஆரிய மத மூடநம்பிக்கை களே முதன் முதல் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட லாயின. சென்ற நூற்றாண்டினிறு தியில் வாழ்ந்த வடலூர் வள்ளலார், இராமலிங்க அடிகளே, பக்தித்துறையில் நின்றபடியே ஆரிய (அ)தர்மத்தை முதன் முதல் கண்டிக் கலானார். அவரது திருவருட்பாவில், "நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா ஆ நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவாரிலை... 33 -எனவும்,
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/23
Appearance