உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இந்நிலையில் இந்தியத் துணைக்கண்டத்தின் விடு தலைக் கான போராட்டங்கள் நிகழ்ந்த போதே, அவற்றுடன் இணைந்தே வடநாட்டவரின் செல்வாக்கும், ஆதிக்கமும் தெற்கே விரிந்து பரவுகின்ற உண்மை தெளிவாயிற்று. விடுதலை இயக்கமான காங்கிரசின் முடிசூடா மன்னர்களாக விளங்கும் வாய்ப்பெல்லாம் வடவருக்கே சென்றதைக் கண்டனர். வரலாற்றில், வடக்கே தோன்றிய பலப்பல சாம் ராஜ்யங்கள், பேரரசுகள் தெற்கே விரிந்து பரவிய பல காலங்களில் தமிழ் நிலத்தைத் தவிர-திராவிடத்தைத் தவிர பிறபகுதிகளையே தமது ஆதிக்கத்தில் அகப்படுத் தியதை அறிந்திருந்த பெருமக்கள், இந்நாள் விடுதலை இயக்கத்தின் பேரால், வடக்கு தெற்கின்மீது தனது பிடியை வலுப்படுத்தி வருவதையும், தெற்கைத் தலை தூக்க விடாத போக்கையும் கண்டனர். உரிமை உணர்வு பொங்கலாயிற்று. ஆதிக்கவாதி அங்கே ! ஆளடிமை இங்கே ! அடக்கிப் படைப்பவர் அங்கே! அடங்கிக்கிடப்பவர் இங்கே! தலைமைப் பீடம் அங்கே ! எடுபிடி நிலை இங்கே! ஆட்சி அங்கே ! வீழ்ச்சி இங்கே ! என்ற இந்தப் போக்கு ஒவ்வொரு துறை யிலும் இடம் பெற்று வருவதைக் கண்டனர். க . பல காலமாகவே மதத் துறையில், புண்ணிய தீர்த்தம் கங்கை, புண்ணிய தலம் காசி, துவாரகை துவாரகை என்று வழங் கியதுபோல், அரசியலுக்குத் தலைநகர் டில்லி, வாணிபத் துக்குப் பீடம் பம்பாய், நெசவாலைகளுக்கு உரிய இட ஆமதாபாத், இரும்புத் தொழிலுக்குச் சிறப்பிடம் ஜெம் ஷெட்பூர் என்று இப்படியே வடக்கின் பட்டியல் வளரு வதைக் கண்டனர். இதற்குத் துணையாகவே காங்கிரஸ் அமைகிறது என்பதையும் கண்டறிந்தனர் பலர் பலர். அவர் களுள் சர்.பி. தியாகராயர் அவர்களும் டாகடா டி. எம். நாயர் அவர்களும், வடவர் ஆதிக்கப் போக்கை கண்டே வெவ்வேறு சமயங்களில் காங்கிரசினின்றும் விலகிக் கொண்டனர். தென்னாட்டின. நிலைமையை எண்ணி மனவேதனை கொண்ட நல்லறிஞர் பலருள் ஒருவ 110268