26 ன் ரான டாக்டர் சி.நடேச முதலியார் அவர்கள் தென் னாட்டு மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கத்தோடு 1910 - ஆம் ஆண்டிலேயே 1910-ஆம் திராவிடச் சங்கம்" பெயரால் ஒரு கழகத்தைத் தொடங்கி நடத்தி வரலானார். அதன் மூலம் திராவிடத்தின் மேன்மை, தொன்மை, நன்மைகள் பற்றிப் பல விரிவுரைகள் நிகழ்ந்து வந்தன. நகர அக்காலத்தில், தியாகராயரும், நாயரும், சென்னை சபை உறுப்பினர்களாக அமர்ந்து, ஒருவரோடு ஒருவர் மாறுபடும் வகையில் ஆற்றல் மிக்க எதிர்க் கட்சி யினராக அருந்தொண்டாற்றி வந்தனர். அவர்களது ஆற்றலையும், அவ்விரு அரும் பெரும் தலைவர்களும் ஒரு வரோடு ஒருவர் எதிர்த்து நிற்பதால் திராவிடச் சமூகத் துக்கு ஏற்படும் பெரியதொரு இழப்பையும் கண்ட டாக்டர் நடேசனார் அவர்கள், அவ்விருவரையும் அவ்விருவரையும் மாறுபாடு நீங்கி ஒன்றுபடச் செய்தார். அம்மூவருமே, தென்னிந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஓர் இயக்கம் தேவை என்பதை முதலில் உணர்ந்தனர். அதன் பயனாக, வெள்ளாடை வேந்தர், திராவிடத் தந்தை தியாகராயர், திராவிடத் தோன்றல் டாக்டர் டி.எம்.நாயர், திராவிடச் செம்மல் டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் முன்னின்று, மற்றும் பலரது ஒத்துழைப்புடன் "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' (S. I. L. F.) எ அமைப்பை நிறுவினர். அவ்வியக்கம் பார்ப்பனரல்லாதார், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை யினர் ஆகியோரின் நலன்களையும் உரிமைகளையும் பாது காக்க முனைந்தது. GT GOT ஆங்கில அரசாங்க அலுவல்களிலும், நீதிமன் றங் களிலும், கல்வி நிலையங்களிலும், மற்றும் பல துறைகளி லும் பார்ப்பன வகுப்பினர் மட்டுமே பெரும்பாலாராக இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்ததைக் கண்டே தெ.இ.ந.சங்கத்தார்- மற்ற வகுப்பினர்களுக்கும் அவற் றில் இடமளிக்க வேண்டும் என்று கேட்கத்தொடங்கினர். எனவே அவ்வியக்கமே வகுப்புவாத இயக்கம் என தூற்றப் படலாயிற்று. ஒரு வகுப்பார் ஆதிக்கம் செலுத்த, மற்ற
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/27
Appearance