உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அவர்கள் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் திரு. ஈ.வே.ரா. தமது வகுப்புரிமைத் தீர்மானத்தை வலியுறுத்தலாயினர். மாநாட்டின் தலைவரான திரு. திரு. வி. க. அவர்களோ, வகுப்புரிமை, வகுப்பு வாதத்தை வளர்க்கும் என்ற கருத்துடையவராக இருந்த தாலும், சுயராஜ்யக் கட்சியின் அரசியல் திட்டத்தைக் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு தேர் தலில் ஈடுபட வேண்டும். என்ற கருத்துப்பட கொண்டுவரப்பட்ட தீர்மானம் விவாதத்திற்குப்பின் கைவிடப்பட்டு விட்டதாலும், பதவி யைக் கைப்பற்றும் நிலை தோன்றாதபோது வகுப்புரிமைத் தீர்மானத்திற்கு ஏது அவசியம் என்ற எண்ணத்தாலும், தலைவர் திரு.வி.க., ஈ.வே.ரா. தீர்மானத்திற்கு அநு மதி மறுத்து விட்டார். தீர்மானத்தை, எக்காரணம் பற்றி மறுத்திருப்பினும் தடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, அழுத்தி வைக்கப்பட் டுள்ள உரிமை உணர்ச்சி எவ்வளவு காலந்தான் வெளிப் படாமல் இருக்க முடியும் ? ஆகவேதான் அம்மாநாட்டி லேயே, 'வகுப்புரிமையை நிலைநாட்டுவேன், பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை ஒழித்துக் கட்டுவேன் !' என்ற வீர முழக்கத்தோடு தலைவர் ஈ. வே.ரா., அறிஞர் எஸ். இராம நாதன் தோழர் எஸ். வி. வி. லிங்கம் முதலிய பலருடன் காங்கிரசை விட்டு வெளியேறினார். ற காங்கிரசை விட்டு வெளியேறிய அக்குழுவினர், தமிழர்களின், அரசியல், சமூகவியல், மதவியல் முதலிய துறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைபெறக் காரணமாக உள்ளவைகளைக்கண்டு, அவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறுவதையே இலட்சியமாகக் கொண்டனர். ‘சுயமரியாதை’ இயக்கம் தோன்றிற்று. ஆராய்ச்சியால் பார்ப்பன ஆதிக்கத்திற்கான பல காரணங்களும் மேலும் மேலும் தெளிவாகப் புலப்படலாயின. பிராமணர்-பூதேவர், பிரம்மாவின் முகத்தில் பிறந் தோர், தேவபரம்பரை, இருபிறப்பாளர், ஞானிகள் சாஸ்திரிகள், உயர்சாதியினர், வலது கையிலே அக்னி வைத்திருப்பவர் எனக கருத்தில் நம்பிக் கொண்டு