31 தம்மைப் பிரம்மாவின் பாதத்தில் பிறந்தோர், இழிகுலத் தவர், சூத்திரர், பிராம் மணருக்குத் தொண்டு செய்வதே கடனாகக் கொண்டவர் என எண்ணி இருப்பதாலேயே பார்ப்பனரல்லாதார் இவ்விழி நிலைக்கு ஆளாயினர் எனக் கண்டனர். பார்ப்பனரைச் சாமி என்று தாம் அழைப் பதும், நமஸ்கரிப்பதும், அவர் தம்மை இழித்துரைப்ப தைக் கேட்டும், உணர்வின்றி அவற்றை ஏற்றுக் கிடப்பது பாகிய ஏமாளித்தனம்,பா. அல்லாதாருக்குச் சுயமரியாதை உணர்வின்மையாலேயேயாம் எனவும் கருதினர். எனவே சூத்திரன் என்றால் ஆத்திரங் கொள் " பானைச் சாமி என்று அழையாதே," "புரோகிதனைப்போற் றாதே" என்னும் தன்னுணர்வுத் தொடர்கள தோன்றின. தான "பார்ப் மேலும் மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால்தான் பார்ப்பனர்களின் கர்வ மனப்பான்மையும், மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையும் நீங்கிச் சமத்துவம் அரும்ப முடி யும் என்பதும் விளங்கிற்று. அதற்காகவே, மக்களிடை பழமை, வைதீகக் கொள்கைகளின் கேடுகளை விளக்கிப் பகுத்தறிவுக்கருத்துக்களைப் பரப்பலாயினர். சுயமரியாதை இயக்கம் விதைக்கப்பட்ட பின்பே, அதன் பயனாகக் 'குடி யரசு'-முளைத்தது, 'ரிவோல்ட்' (revolt) 'புரட்சி' தழைத் தது. 'பகுத்தறிவு' அரும்பிற்று, 'விடுதலை' பூத்தது. , அக்காலத்தில்தான், தமிழகத்தின் இருள் போக்கும் பணியில் ஈடுபட்ட அறிவுச் சுடர்களான, பகுத்தறிவாளர், எஸ். இராமநாதன், தனமான வீரர். சௌந்தர பாண்டியன் சிந்தனையாளர். மா. சிங்காரவேலர், கருத்துரையாளர். கைவல்யனார், அஞ்சா நெஞ்சர் அழகிரியார், செயல்வீரர். எஸ். வி. லிங்கம், கொள்கை வீரர். (பூவாளூர்) பொன்னம் பலனார், பொதுவுடமையர், ஜீவாநந்தம், கலப்பு மணத் தினர் குருசாமி குஞ்சிதம், வீரத்தொண்டர்கள், மாயவரம் நடராசன், நாகை-மணி, திருவாரூர் T.N. இராமன், சேலம் சித்தையன், காரைக்குடி இராமசுப்பையா, புரட்சிக் கவிஞர். பாரதிதாசன், வீரத் தாய்மார்கள் நாகம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிய பலப்பலர், சுயமரியாதை இயக்கத்தின் உடலாயினர். தலைவர் ஈ.வே.ரா.உயிரானார். அவர்களது ஓயாத உழைப்ப
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/32
Appearance