உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பின்னர் நாளடைவில், மக்கள் உள்ளம் உறுதிபெற் லாயிற்று, உரிமை உணர்ந்து குமுறலாயிற்று. அந்தக் குமுறலின் பயனாகவே மாற்றாரை வெளியேற்றும் மகத் தான உரிமைப் போரும் தொடங்கப் பெற்றது. உரிமைப்போர் முதலிலேயே வெளிப்படையாகப் பெரும்போராகத் தோன்றிவிடவில்லை. சிறுசிறு நலன்க ளைப் பெற விரும்பி அவைகளை அரசாங்கத்திற்கு விண்ணப் பிக்கும் அரும்பாகிச், சிலபல ஆண்டுகளில் பதவிகளில், ஆளும் பீடத்தில் பங்கு கேட்கும் போ தாகிப், பின்னும் சில ஆண்டுகளில் நாட்டுக்குச் சுய ஆட்சி வேண்டும் என்று அறிவிக்கும் மலராகி, இறுதியாகவே விடுதலை மணம் வீசுவதாயிற்று. உரிமை வேட்கை முதற்கண் சிறு பொறி யாகத் தோன்றி, தலைவர்களின் தொண்டாலும் வீரர் களின் தியாகத்தாலும், வளர்ந்து வளர்ந்து பெருந்தீயா யிற்று. இருநூற்றைம்பது ஆண்டுகட்கு மேல், இடங் கொண்டு நிலைபெற்று வளர்ந்து வந்த கிழக்கிந்தியக் கம் பெனியார் ஆட்சிக் காலத்தில் 1857-ஆம் ஆண்டில் சிப் பாய்க் கலகம் நடைபெற்றது. கலகம் கலக்கத்தை விளை வித்தது. கலக்கம் ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றியது. 1858 - நவம்பரில் ஆங்கிலப் பேரரசி விக்டோரியா அவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சிப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எனினும், அந்நிய அந்நிய ஆட்சியைப் பற்றிய வெறுப்புணர்ச்சி வேர் விட்டு வளரத்தான் ய செய்தது. 1885-ஆம் ஆண்டில்தான், இந்திய தேசீயக் காங் கிரஸ் பிறந்தது. அதற்கு மூலமாக இருந்து தோற்று வித்தவர் ஹ்யூம் என்ற வெள்ளையரே யாவர். தா தாபாய் நௌரோஜி முதலான பல தலைவர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் 'காங்கிரஸ்' இயக்கம் தவழலாயிற்று. சுமார் 35 ஆண்டுகள் ஆண்டுகள் உருண்ட உருண்ட பின்பே மாராட்டிர தலை வர் லோகமான்ய பால கங்காதர திலகர், பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய், வீரர் பிபின் சந்திர பாலர் முதலிய பெருந்தலைவர்களின் -வீர முழக்கங்களினால் விடு தலை