7 இயக்கமான காங்கிரஸ் மக்கள் கிளர்ச்சிகளிலும் ஈடுபடலாயிற்று. ஆதரவு பெற்றுப் பல அக்காலத்தில், தென்னாட்டில் அந்த உரிமை வேட் கையை வளர்த்து ஆர்வத்தீயை மூட்டி, விடுதலை ஒளி யைப் பரப்பிய பெருமை, தென்னாட்டுத் தென்னாட்டுத் திலகரெனத் திகழ்ந்த தூத்துக்குடி வீரர், கப்பலோட்டிய தீரர், வைதீக வைரி, தண்டமிழ் அறிஞர், வ. உ. சிதம்பரனார் அவர் களுக்கே உரியதாகும். விடுதலை வீரர், தேசீயக் கவி, சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளும், சுப்பிரமணிய சிவா முதலிய பல பெருமக்களின் தொண்டும், விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாயின. பின்னர், அறிவுக் களஞ்சியம் அன்னிபெசண்ட் அம்மையாரின் தலைமையில் சுய ஆட்சி இயக்கம் (Home Rule Movement) சிறப்பாக நடைபெற்ற காலத்தும், அடுத்து, காங்கிரஸ் இயக்கம், உத்தமர் காந்தியடிகளின் தலைமையினை ஏற்று, ஒத்துழையாமை முதலிய போராட் டங்களை நடத்திய காலத்தும், தென்னாட்டில் விடுதலை இயக்கத் தொண்டு புரிந்தவர்களிலே மிகவும் முக்கியமான இடம் பெற்றிருந்தவர்களே - தமிழ்த் தென்றல், திரு.வி.க. திரு. ஈ.வே.ரா., டாக்டர். வரதராசலு ஆகியோர் ஆவர். அம்மூவருமே, நாயக்கர், நாயுடு, முதலியார் என்று சேர்த்தே வழங்கப்பட்ட பெருமைக்குரியோராவர். ஆவர் களுடன் தலைவராக மயிலை சீமான் சீனிவாசய்யங்காரும், சந்தர்ப்பத் தொண்டராக சக்கரவர்த்தி இராஜகோபா லாச்சாரியரும் பணிபுரிந்து வந்தனர். போக்கையே முதலாவது பெரும்போர் உலகம் மாற்றியது. அதனால் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தாலும், நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சியாலும், விடு தலை இயக்கத் திற்கு ஆதரவு பெருகிற்று. ஒத்துழையாமை இயக்கம், உப்பள மறியல், (சத்தியாக்கிரஹம்) கள்ளுக்கடை மறியல் முதலிய கிளர்ச்சிகளால் பாமரர்களின் கவனமும் திரும்பி யது. கதர் நூற்பு, கதருடுத்தல் முதலிய திட்டங்கள், காங்கிரஸ் தொண்டர்களின் கடமை உணர்ச்சியையும், கட்டுப்பாட்டையும் வளர்த்தன. உத்தமர் காந்தியடி
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/8
Appearance