பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வளர்ப்பு மகள்

தப்புன்னா மன்னிச்சுடுங்கள். இல்லன்னா, உங்கள் மகளை நல்லா அடியுங்கள்... இந்தாங்க கன்னம்.

மல்லிகா, முதுகைக் குனிந்து. முகத்தைக் காட்டியபோது, பார்வதி அதில் முத்தமிட்டாள். மல்லிகா, சமரசம் செய்தாள்.

"சரிம்மா. நீங்கள் இப்போ புறப்படுங்கள். நான் காலையில் அங்கே வந்துட்டு... சாயங்காலமாய் இங்கே வந்துடுறேன்."

கார் புறப்பட்டது. தங்கம்மா செல்லம்மாவையும் ஏற்றிக் கொண்டு ஏறிக்கொண்டாள். பெருமாள், "தங்கசாலை வரைக்கும் வாரேன். பள்ளிப்பட்டுல கோணி கிடக்குது" என்று சொல்லிக்கொண்டே காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்தார்.

கார் போய்விட்டது.

மல்லிகா, 'இட்லி' ஆயாவை தன்பக்கமாய் சேர்த்துப் பிடித்துக்கொண்டே இதர குடித்தனப் பெண்களுடன் சேர்ந்து இணைந்து, பிணைந்து நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/134&oldid=1134250" இலிருந்து மீள்விக்கப்பட்டது