பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

135

முக்கியமே தவிர கற்பனைகள் இல்லை. நீ வேலை பார்க்கிறியா? இல்லையா? பிறகு எப்படி பிழைப்பே?"

"பிச்சை எடுப்பேன்... பிளாட்பாரத்தில் படுப்பேன்."

"அப்படின்னா போலீஸ் முதல் தெருவோர தாதா வரைக்கும் உனக்கு சிபிலிஸ் நோயோடு, எய்ட்ஸ் நோயையும் கொடுப்பாங்க ரயில்வே ஸ்டேஷனில் படுத்தால், புரோக்கர்கள் வந்து தூக்கிட்டு போவான். கணவன்கிட்ட இருந்து இப்போதைக்கு விடுபட விரும்பாதே... உன்னால சுயமா நிற்க முடியாது. முடியுறது வரைக்கும் அவனோடு இரு.. அதோட இந்திரனுக்கே சாபவிமோசனம் கிடைத்தது. உன் புருஷனுக்கு கிடைக்கக் கூடாதா என்ன!"

"ஒரு ஊசியிலே சரியாகிவிடுமுன்னு அந்த ஆளு பழையபடியும் திரிய ஆரம்பிச்சா?"

"இப்படிக் கேளு. இதுதான் நியாயம். உன் புருஷனை என்கிட்ட கூட்டிட்டு வா. நோயையும் குணப்படுத்தி வேப்பிலையும் அடிக்கிறேன். அதே சமயம் இப்பவே டி.டி.பி மாதிரி ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரு. ஒரு பெண்ணுக்கு நிசமான கால்கள் பொய்யானவை... பொருளாதார கால்கள் தான் மெய்யானவை..."

டாக்டர் காய்த்திரியும், சந்திராவும் டாக்டர் முத்துராஜை நன்றியோடு நோக்கிவிட்டு, வாசல்வரை போய்விட்டார்கள். சந்திராவிற்கு மனம் லேசுப்பட்டது. தாம்பத்தியப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது டாக்டர் முத்துராஜ் 'இந்தாங்கம்மா' என்று அவர்களை திரும்ப அழைத்துப் பேசினார்.

"சிபிலிஸ் நோய் இருந்தால் எய்ட்ஸ் நோய் வர வாய்ப்புண்டு. அதனால இவங்களுக்கும். இவங்க கணவருக்கும் எச்.ஐ.வி. டெஸ்ட் எடுக்கணும். இந்தாம்மா... நாங்க சொல்றது வரைக்கும் நீங்க இரண்டு பேரும் காண்டம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது."

"இவளோட ரத்தத்தை ஹெச்.ஐவி. டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டேன்"

"அய்யய்யோ எனக்கு இருக்குமோ!"

சந்திரா. அவர்கள் மீது யாசகப் பார்வையை வீசினாள். அந்த நோயின் பெயரை வாயால் சொல்வதற்குக்கூட பயந்தாள். அவளைப் பொறுத்த அளவில் பூமி பிளந்தது... ஆகாயம் தலையில் விழுந்தது...

சந்திரா. எதிர்பாராத வகையில் டாக்டர் காய்த்திரியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை உன்னோடு வச்சிக்கடி வச்சிக்குவியாடி என்று கண்ணீர் முழுக்கு செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/149&oldid=1134561" இலிருந்து மீள்விக்கப்பட்டது