பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


@goor Gmữogså noroñ#gsb (Right side Taekling) றுைம், தவருகச் சமாளித்தல் (Wrong side Tackling) என்றும் பிரித்துக் கூறுவார்கள். தவருகச் சமாளித்தல் என்பது எதிர்க்குழுவின ரின் இடது கைப்புறமாகச் சென்று பக்தை எடுத்தாட முயல்வதாகும். இது தவறன ஆட்டம் என்பது மட்டு நல்ல. அபாயம் ஏற்பட்டுவிடுகின்ற ஆட்டமுமாகும். இது பார்வையாளர்களுக்கு அருவெறுப்பையும், எதிராளிகளுக்கு எரிச்சலையும், ஆடிக்கொண்டிருப்பவ ருக்கு கோலால் அடி வாங்கிக்கொள்கின்ற அபாயத்தை யும் தருவதுடன், தண்டனையையும் நடுவரிடமிருந்து பெற்றுத் தந்துவிடுவதால், இதனை யாவரும் விரும்பவே மாட்டார்கள். இதனைத் தவிர்த்து ஆடுவது தான் கன்மையுள்ளவர்களுக்கு அழகாகும். நேர்வழிச் சமாளித்தலை காப்பாளர்கள்தான் அதிகம் செய்கின்ற வாய்ப்பும் சூழ்நிலையும் ஆட்டத் தில் ஏற்படும். முன்னுட்டக்காரர்கள் எல்லோரும் விரைவுடனே பந்தை இலக்கை நோக்கி எடுத்துக் கொண்டு வருவார்கள். அப்பொழுது காப்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்ப துடன், அவசரப்படாமலும் ஆத்திரப்படாமலும் பந்தின் இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டும். Ç - - பந்துடன் வருபவரை சமாளிக்கும் சரியான இடம், அயான நேரம் எது என்று அவரின் இயக்கத்தை அறிந்து உணர்ந்துதான் காப்பாளர்கள் செயல்பட வேண்டும். அதில் தவறு நேர்ந்துவிட்டால், நிச்சயம் பந்து இலக்கிற்குள் போய்விடுமே! - -