பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


8. §(5;} gim (Bih oblo Lih (Back play) விரைவோடும் குறியோடும் எதிர்க் குழுவின் முன் ஆட்டக்காரர்கள் பந்துடன் பாய்ந்து வரும்பொழு 蠶 தடுத்து ஆடும் காப்பாளர்கள் சமாளிக்கின்ற திறன் யில் தான், இலக்குக் காக்கப்படுகின்ற அமைப்பில் தெளிவு ஏற்படும். இல்லையேல், வெள்ளத்தின் முன்ன்ே வெறும் மணல் மேடு இருப்பது போல் தான் அமையும் முன்னேறி வருகின்றவர்களைத் தடுக்கும் முறை யில் முன்று விதமான அமைப்பைக் காட்டுவார்கள் ஆட்ட நிபுணர்கள். எதிரி எட்டத்தில் இருந்து வரும்பொழுதே, தான் நிற்கும் இடத்திலிருந்து இடது காலை ஒரடி முன்னே எடுத்து வைத்து, சற்று, முன் குனிந்தவாறு எட்டிய மட்டும் இடது கையுடன் கோலை முன் நீட்டி, அவரது முன்னேற்றத்தைத் தடை செய்வது ஒரு வகையாகும். அருகில வந்து ஆடும்பொழுது, இரு கைகளாலும் கோலைப் பிடித்துக் கொண்டு, அவர் எந்தப் பக்கம் இயங்குகிருர் என்பதனை அறிந்து, அந்தப் பக்கமாக ஏற்றவாறுள்ள கையை (வலப்பக்கம் வந்தால் வலது கை இடது பக்கம் வந்தால் இடது கை) நீட்டி அவரது இயக்கத்தைப் பந்துடன் சமாளிப்பது இரண்டாவது. முறையாகும். எதிரியின் முன்னேற்றத்தை எளிதாக விட்டு விடாமல், தம்மை மீறி ஓடினலுங்கூட, வலது கையில் கோலைப் பிடித்து, முன்புறமாக நீட்டிப் பந்தினைத் தட்டிச் சமாளித்து ஆடுகின்ற முறை மூன்ருவது வகை.