பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


இவ்வாறு சமாளிப்பதால், எதிரிக்கு நிலை குலைவும்: நமக்கும் தம் குழுவிற்குத்தேவையான வலிவும் கிடைக் கிறது என்பதுதான் இத்தகைய தடுத்தாடும் ஆட்டத் சின் ரகசியமாகும். எவ்வளவு நேரம் எதிரியை முன்னேற விடாமல், அப்படியே தொடர்ந்து சமாளிக்கிருேமோ, அவ்வளவுக் கவ்வளவு, தமது பாங்கர்கள் கூடி வந்து சூழ்ந்து கொண்டு, மேற்கொண்டு அவரை முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து, காத்துக்கொள்ள முடியும். வேகமாக பந்துடன் ஒடி வரும்பொழுது, தடுத்து விட்டால், அவரது இயல்பான ஒட்டம் கெட்டுவிட பந்தும் கட்டுப்பாட்டிலிருந்து விலகுவதுபோல் ஆகி விடவே, மீண்டும் அவர் பந்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள், தடுத்தாடுவோர் கூடி சமாளிக்க முடியும். - இதல்ை, எதிரியின் தைரியமும் தன்னம்பிக்கையும் கலகலத்துப் போவதால், மீண்டும் அந்த வீறுபெற்றத் தன்மையும் விரைவும் அவர்கள் பெறுவதற்குள் ஆட்டத்தின் சூழ்கிலேயே மாறிப்போய் விடுகிற தல்லவா! இதுபோன்ற அமைப்பினை, வெறும் சொல் லால் படம் பிடித்துக் காட்டினல் புரியாது. ஆடுகளத் ತ್ಗ இறங்கி ஆடினல்தான் இதன் அற்புத சக்தி புாயும. - * இரண்டு கடைக் காப்பாளர்களும், ஒருவருக் கொருவர் அனுசரித்துக்கொண்டு, எவ்வாறு தடுத் தாடுவது என்பதனை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டுதான் ஆடவேண்டும்.