பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 U8 சில சமயங்களில் இருவரும் இடம் மாறிப்போய், தடுத்தாடக் கூடிய நிலையில் இல்லாதபொழுது ஒருவர் பந்துடன் வருபவரைப் பார்த்து, அப்படி இப்படி அலைக்கழிக்கும்பொழுது, ஆட்டங் காட்டுவதுகூட, பந்துடன் வருபவரைப் பயப்படச் செய்து, தடுமாறச் செய்துவிடும். சில நேரங்களில், அடிக்கும் வட்டம் தாக்குபவர் களால் சூழப்பட்ட நெருக்கடி நிலையில் இருக்கும் பொழுது, கடைக்காப்பாளர்கள் பின்புறம் ஒடிச்சென்று. இலக்கினைக் காப்பதுபோல பின் நின்று, இலக்குக் காவலரின் பார்வையை மறைப்பதுபோல ஆடுவதும் உண்டு. அப்படிச் செய்யாமல் எதிராளிகளைத் தாக்கி ஆடி, இலக்குக் காவலனைத் தனியாக ஆடவிட்டால், அதல்ை பயன் நிச்சயம் ஏற்படும். இதல்ை இலக்குக் காவலன் தயாராக நிற்பதால் பந்தைத் தடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது. எதிராளியாலும் குறிப்பாகப் பந்தை அடிக்க இயலாமல் போய்விடுகிறது. m ஆகவே, தடுத்தாடுவோர் தைரியமாக கின்று சமாளித்து எதிரிகளின் முயற்சிகளையும் முன்னேற்றத் தையும் தடை செய்து தடுத்தாட வேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கு என்று முன்னரே கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும், தடுத் தாடும் ஆட்டத்திற்கும், தாக்கி ஆடும் ஆட்டத்திற்கும் பொருந்தும். ஆடுகளம் பலவிதம் இனி, ஆ. விருக்கின்ற ஆடுகளங்களின் தரை அமைப்பைப் பொருத்தும் ஆட்டம் அமையும் என்ப