பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

(4) அடிக்கும் வட்டம் (Striking Circle)

   ஒவ்வொரு இலக்கிற்கும் முன்பாக, 3 அங்குல அகலத்துடன் 4 கெச நீளம் இருக்கும் இணைய உள்ள வெள்ளை நேர்க்கோடுகளால் ஆக்கப்பட்டு கடைக் கோட்டிலிருந்து 16 கெச நீளம் கொண்டதாகவும் அமைந்திருக்க, அந்தக் கோடுகள் 3 அங்கு அகலம் வரையப்பட்டக் கால் வட்டமாக வந்து கடை கோட்டுடன் இணைகின்றன.
   இந்தக் கால் வட்டக் கோடுகளாலும், கடை கோட்டாலும் சூழப்பட்ட பரப்பே (கோடுகள் உட்பட ‘அடிக்கும் வட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

(5) இலக்குவும் வெற்றி எண்ணும் (Goal)

   முன்னர் விளக்கியுள்ள அடிக்கும் வட்டத்திற்குள் தான், வெற்றி எண்ணப் பெறத் துடிக்கும் விளையாட்டு வீரர்கள் பந்தாட வேண்டும்.
   இரண்டு, இலக்குக் கம்பங்களிடையே, குறுக்குக் கம்பத்திற்குக் கீழாக, கடைக் கோட்டைக் கடந்து பந்து உருண்டு சென்று விட்டால், இலக்கிற்கு எதிராளிகள் வெற்றிகரமாகப் பந்தை அடித்து வெற்றி பெற்று விட்டார்கள் என்று வளைகோல் பந்தாட்டத்தில் கருத, விதிகள் இடந்தரவில்லை.
   இலக்கிற்குள் பந்தை எவ்வாறு அடிக்க வேண்டும். என்பதற்கும் தனியான, சிறப்பான விதியை அமைத்திருக்கின்றனர் ஆட்ட வல்லுநர்கள்.
   அடிக்கும் வட்டத்திற்குள்ளிருந்து தாக்கும் குழு ஆட்டக்காரர் அல்லது ஆட்டக்காரர்களால் அடிக்கப்பட்ட அல்லது அவரது கோலின்மீது பட்ட பந்து