பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


இலக்கினுள் சென்றிருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய விதிமுறையாகும்.

     தடுக்கும் குழுவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரா்கள், அடுத்தடுத்துப் பந்தைத் தொட்டோ அல்லது விளையாடியோ தங்கள் இலக்கிற்குள் பந்தை அனுப்பி விட்டால், என்ன செய்வது என்றால், அது இலக்கினுள் சென்றதல்ல என்பதே முடிவாகும்.
     அவ்வாறு சென்ற பந்தை, கடைக்கோட்டைக் கடந்து வெளியே சென்ற பந்து என்றே கருதப்படும். அதற்குப் பிறகு முறையான விதிகளுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பெறும்.

     ஆகவே, எதிர்க் குழுவினர் இலக்கினுள் பந்தை அடித்து வெற்றி பெற வேண்டுமென்றால், அடிக்கும் வட்டத்திற்குள் இருந்துதான் பந்தை அடிக்கவேண்டும். அடிக்கும் வட்டத்திற்கு வெளியே இருந்தவாறு பந்தை அடித்து இலக்கினுள் அனுப்பினால் அது வெற்றி எண்ணைத் தராது என்பதை ஒவ்வொரு ஆட்டக்காரரும் நன்கு உணர்ந்தே ஆடவேண்டும்.

ஆட்டம் நின்றுபோய், அடிக்கும் வட்டத்திற்குள் இருந்து மீண்டும் பந்தை அடித்தாடித்தான் தொடங்க வேண்டும் என்ற சூழ்நிலை அமைந்தால்கூட, அடிக்கும் வட்டத்தில் உள்ளிருக்கும் ஒரு எதிர்க்குழு அதாவது தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரால் ஆடப்படுகின்ற பந்து, இலக்கினுள் சென்றால்தான் வெற்றி எண்ணைத் தரும் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர வேண்டும்.