பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

     கடைக்கோட்டைக் கடந்து, முழுதும் பந்து உருண்டு சென்றால்தான் அது வெற்றி எண்ணணக் கடைக்கோட்டின்மீது இருந்தாலும், அடிக்கும் வட்ட கோட்டில் இருந்தாலும், பந்து இன்னும் அடிக்கும் வட்டத்திற்குள் உள்ளதென்றே கருத்தில் கொள்ளப்படும்.
    ஆடுகின்ற நேரத்தில், பந்து முழுவதும் கடைக்கோட்டைத் தாண்டி கடந்து செல்கின்றபொழுது இலக்குக் கம்பம் அல்லது குறுக்குக் கம்பம் இடப்பெயர்ந்தோ அல்லது ஒடிந்தோ விழுந்து விட்டால் அந்தக் கம்பம் அதே இடத்தில் இருந்திருந்தால் அதனுள் பந்து சென்றிருக்கக்கூடும் என்று நடுவர் கருதினால், அது இலக்கினுள் சென்றது, வெற்றி எண் தான் என்று நடுவர் கூறிவிடுவார் என்ற விதியையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
    அதிகமான வெற்றி எண்களைப் பெறுகின்ற

குழுவே ஆட்டத்தில் வெற்றி பெறும் என்பதும் நமக்கு நன்கு தெரியுமே!

இரு குழுக்களும் ஆட்ட நேர முடிவில் சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால், மிகை நேரம் 5 நிமிடம் என்று இருமுறை ஆடும் வாய்ப்பினை, முன்னரே கலந்து ஆலோசித்திருந்தால், ஈடுவர் ஆட அனுமதிக்கலாம். அப்பொழுதும், இரு குழுக்களும் சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால், முன்பெல்லாம். இறுதி ஆட்டமாக இருந்தால், இருவரும் வெற்றி பெற்றனர் என்று என்று அறிவித்தும், அரை இறுதி கால் இறுதி ஆட்டமாக இருந்தால் நாணயத்தைச் சுண்டி எறிந்து முடிவெடுத்தும் அல்லது மறுநாள் விளையாட விட்டும் முடிவு கண்டனர்.