பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

    முன்னாட்டக்காரர்களும், இடைக்காப்பாளர்களும் எதிரியின் முன்னேற்றத்தை, முயற்சியைத் தடை செய்து, தடுத்தாட முடியாதவாறு தடுமாறி, எதிரிகள் தாங்கள் அடிக்கும் வட்டத்திற்குள்ளே புகுந்து ஆடவிட்டாலும், இறுதி நேரத்திலும் கடைசிவரை தன் குழுவின் பெருமையினைக் காப்பதற்காகப் போராடும் பெரும் பொறுப்பைச் சுமந்து கொண்டு படாத பாடுபடுபவர் இவர்தான்.
     ஒரு குழு நிமிர்ந்து நிற்க வேண்டுமானல். காவலர் கெட்டிக்காரராக இருந்தால்தான் முடியும். 
      முன்னாட்டக்காரர் பந்தைத் தடுக்காது விட்டு விட்டால், இடைக்காப்பாளர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்பலாம். அது அவர்கள் தவறில்லை. அதேபோல் மற்ற ஆட்டக்காரர்களும் முயற்சி செய்து தோற்கலாம். அதிலும் குறையில்லை. நன்றாக சமாளித்தார்கள் என்று சமாதானம் கூறலாம். அவர்களை பாராட்டவும் செய்யலாம்.

அதேபோல் இலக்குக் காவலரும் எதிராளியை இலக்கினுள் அடித்தாட விட்டு விட்டால், ஏதேனும் சமாதானம் சொல்ல முடியுமா?

இவர் தவறிழைத்து விட்டாலும், முறையாகத் தடுக்காவிட்டாலும், குழு, பெற்ற இழப்பு இழப்பு தானே! சரியாக இலக்கைக் காக்கவில்லை என்ற பழி தானே கடைசியில் இவருக்குக் கிடைக்கிறது.

அதனால் தான் திறமையானவர் மட்டுமே இந்தப் பணிக்குத் தேவை என்பதை உணர்த்த, முதன் முதலாக இலக்குக் காவலரைப் பற்றிக் கூறுகிறோம்.