பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

   ‘கையிலே வளைகோல் இருக்கிறது. கால்களும் மெத்தை போன்ற உறைகள். மொத்தமான கால்கள். அவர் காலால் உதைக்கலாம். கோலால் தடுக்கலாம், தேக்கலாம், அடிக்கலாம்.’
    எல்லா உரிமையும் இருக்கும்பொழுது, இலக்குக் காவலராக இருக்க முடியாதா! என்னால் முடியும் என்று யாராவது வீறாப்பு பேசிக்கொண்டு போனால், அவரின் நிலை பரிதாபநிலை என்று அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியேயில்லை.
    சிறந்த குண நலன்களும், பரந்துபட்ட திறமையுள்ளவர்களும் மட்டுமே இதற்கு வேண்டும் என்று கூறினுேம் அல்லவா! அவற்றை இனி விவரிப்போம்.
    இலக்குக் காவலருக்கு முதலில் தேவை தைரியம் தான். ‘அடிக்கும் வட்டத்திற்குள்’ நுழைந்துவிட்ட எதிர்க் குழுவினர், இரக்கமில்லாமல் ஒருவித வெறியுடன் அடிக்கின்ற பந்தானது, எகிறிக் கொண்டல்லவா வரும்! அதைக் கண்டு அஞ்சினால் என்ன ஆகும்?
    பந்து வந்து முகத்தில் மோதிவிடுமே நெஞ்சைத் தாக்கி விடுமே அதனால் அடிபடுமே! வேதனை மிகுமே! என்றெல்லாம் பயப்படுவர்கள், இந்தப் பக்கமே வரக்கூடாது.

தன்னால் எந்த வேகமான பந்தையும் தடுக்க முடியும் என்ற தளராத தன்னம்பிக்கை வேண்டும். தைரியத்துடன் தடுக்கும் வலிய நெஞ்சு வேண்டும் எதையும் எளிதாக இனிதாக ஏற்கும் மனப்பாங்கும் வேண்டும்.