பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

குறுமுனை (Short Corner) எடுக்கும் பொழுது கடைக்காப்பாளா்களால் தான் கணக்காக அடிக்க முடியும். ஏனென்றால், அங்குமிங்கும் அதிகமாக ஓடாமல் அசதியடையாமல், தளர்ச்சியில்லாமல் இவர்கள் இருப்பதால், குறியாகவும், சாியாகவும் அடிக்க வாய்ப்பு உண்டு. இந்தத் திறமையை சிறப்புறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடைக்காப்பாளா்களின் பணியானது பந்தைத் தடுப்பது, வேகமாக அடித்து அனுப்புவது என்ற திறமையினால், தரமான ஆட்டத்தினால் தான் புகழ்பெற முடியும் என்பதைக் கடைக் காப்பாளர்கள் என்றும் கருத்தில் பதித்துக்கொள்வது தலையாய கடமையாகும்.

3. இடைக்காப்பாளர்கள் (Half Backs)

பெருமை: இந்த ஆட்டத்திற்கு இவர்கள் இதயம் போன்றவர்கள். உணர்ச்சி மிகுந்த உயிா்நாடியின் ஒப்பற்ற ஓட்டம்போல, இவர்கள் தங்கள் ஆடுகளப் பரப்பில் எங்கும் பரவியிருந்து பணியாற்றுகின்றாா்கள்.

இவர்கள் எளிதாக, இலேசாக எதிர்க் குழுவினரால் ஏமாற்றப்பட்டால், கடைக் காப்பாளர்களும், இலக்குக் காவலரும் அடிக்கடி திண்டாடிப்போக நேரிடும். தீராத அவதிக்குள்ளாகவும் கூடும்.

வேங்கைப் புலியென விரைந்து ஓடிவந்து முன்னேறி வரும் எதிர்க்குழு முன்னுட்டக்காரா்களை முன்னே: நின்று மறிப்பதும்; மீறிப்போனால் பின் தொடர்ந்து வந்து அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுப்பதும்;