பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

தடுத்து நிறுத்தி ஆடக்கூடிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றால், ஆடுகள மையப்பகுதியை நோக்கிப் பந்தை அடிக்காமல், ஆடுகளத்தின் இடப்புறம் அல்லது வலப்புறம் என்று பக்கவாட்டை (Wing) நோக்கி அடித்தாடி விடவேண்டும்.

இப்படியும் ஆடி அனுப்பிவிட முடியாமல், எதிரிகள் ஆழ்ந்து கொண்டு விட்டார்கள் என்றால் என்ன செய்வது? பந்தை வலிமையாக அடிப்பதன் மூலம் உயரமாக மேலே எழும்பச் செய்து, அந்த இக்கட்டான நிலையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும். இந்த முறையை அகில உலகப் போட்டிகளில். கடைக்காப்பாளா்கள் பின்பற்றி வருகின்றனா்.

இப்படி மேலெழும்பும் வண்ணம் பந்தை ஆடும் பொழுது, தவறு நேராவண்ணம், நடுவர்களால் தண்டிக்கப்படாத வண்ணம் பார்த்து ஆடவேண்டும்.

இடைக் காப்பாளர்களின் ஆட்டத்தையும் நடமாட்டத்தையும் கண்காணித்து. அவர்களைக் கட்டுப்படுத்தி, ஆட்டத்தில் அவ்வப்போது தாக்கும் வழிகளை, தடுக்கும் முறைகளை அறிவித்து ஆடுதற்குத் துாண்டிக் கொண்டேயிருக்கவேண்டும்.

இரண்டு கடைக்காப்பாளர்களும் ஒரே இடத்தில் நிற்பதோ அல்லது ஆளுக்கொரு பக்கமாக (Side) நிற்பதோ அறிவுடமையாகாது. ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து ஆடுவதுடன், தேவையானால், இடைக்காப்பாளா்களுக்குத் தக்க சமயத்தில் ஓடி உதவி, பந்தை முன்னாட்டக்காரா்களுக்கு வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.