பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பந்து தங்கள் பக்கம் வந்ததும், உடனே பதில் கொடுத்து அனுப்பி ஆடும் முறையே சிறந்ததாகும் தங்கள் எல்லைக்கு அருகில் பந்தை விளையாட முடியதவாறு, துாரத்தில் அடித்து விரட்டுவதில்தான் கடைக்காப்பாளா்கள் கண்னுங் கருத்துமாக விளையாட வேண்டும்.

பந்து தன்னிடம் வந்ததும், அதை முன்னும் பின்னும் இழுத்து உருட்டி ஆடும் (Dribbling) ஆசையை செய்கையை, மனப்போக்கை கடைக்காப்பாளா்கள் மறந்தும் செய்யக் கூடாது. அவ்வாறு ஆடினால் என்ன ஆகும் என்று கேட்கலாம்! இப்படி ஆடும்பொழுது பந்து எதிர்க் குழுவினரிடம் அடிக்கும் வட்டத்திற்குளேயே சிக்கினால், அதுவும் இலக்குக்கு அருகில் அகப்பட்டுக் கொண்டால். நிச்சயம் எதிரிக்கு அது வெற்றி வாய்ப்பையல்லவா தந்துவிடும்!

ஆகவே உடனே அனுப்பிவிடுவதில் மிகவும் குறியாக இருக்கவேண்டும்.

எதிரே வருகின்ற பந்தை, ஆத்திரப்படாமல் அவசரப்படாமல் அடிக்கப் பழகவேண்டும். இல்லையேல் தோள்களின் உயரத்திற்குமேல் கோலை உயர்த்தியதாக ‘கோல் விதி’க்கு ஆளாகி, அதற்குரிய தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

தடுத்து நிறுத்தியாடக் கூடிய சந்தர்ப்பம் இருந்தால், பந்தைத் தடுத்து ஆடுகளப் பகுதியில் இருக்கும் பாங்கர் யார் தனியாக விடப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து, தள்ளி வழங்கி அவர்களை ஆடச் செய்ய வேண்டும்.