பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பொழுது, திடிரென்று ஓடி இலக்கைக் காக்கின்ற இமையும் நாம் முன்னே விளக்கிக் கூறிய விரைத் திட்டத்தால் தான் முடியும்.

அத்துடன், பந்தை வலிமையாக, கடினமாகத் தாக்கி ஆடும் சக்தியும், வல்லமையும், திறமையும், காப்பாளர்களுக்கு வேண்டும். சோம்பேறியாக நின்று சொகுசாக ஆடமுயல்வது, ஓடுகின்ற ரயிலில் ஏறத் துடிக்கின்ற நொண்டிபோல் தான் முடியும்.

ஆடவேண்டிய முறை:— வலிமையுடனும் வேகத்துடனும் பந்தை அடித்து ஆடி அனுப்புகின்ற காப்பாளர்களின் ஆட்டத்திறனைப் பார்த்து, எதிர்க்குழு முன்னாட்டக்காரா்கள் அணுகி வந்து ஆடுதற்கு அச்சமும் அதிர்ச்சியும் கொள்ளத்தக்க வகையில் ஆடுவது நல்லது.

பந்தைப் பலம் பொருந்தியவாறு அடிக்கலாம். ஆனால், பந்து உயரமாக எழும்புவதுபோலவோ, தடுக்க முடியாதவாறே ஆடினால், தன் குழுவில் உள்ள இடைக்காப்பாளா்கள் அல்லது முன்னாட்டக்காரர்கள் அந்தப் பந்தை எடுத்தாடி பயன்பெற முடியாமற்போக நேரிடும். ஆகவே, குறியாகவும், இதமாகவும், எதிரிகளுக்குப் பயமும், பாங்கர்களுக்குப் பயனும் கிடைக்கும்படி ஆடுவது ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் சாமர்த்திய புத்தியசாலியின் செயலை ஒக்கும்.

அடிக்கும் வட்டத்திற்குள்ளே எதிரிகளை நெருங்கித் தாக்கவும், நெருக்கித் தாக்கவும் முழலும்போது, விதிகளை மீறாமல், நிதானமாக அவர்கள் முயற்சியை முறியடிக்க முயலவேண்டும்.