பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உடல் கட்டாக இருந்தாலும், நினைத்தல் திடீரென்று முன்னும் பின்னும் ஓடி இயங்க எப்பொழுதும் ‘விரைவோட்டம்’ (Sprint) ஓடி இயங்கூடிய உடலமைப்புதான் சிறந்த உடலமைப்பு அதை விட்டு விட்டு, ‘குண்டோதரன் போல உடல் கும்பகர்ணன் போல’ நிலையும் கொண்டு, சதை அமைந்திருப்பது போல கோலை வைத்துக் கொண்டு, வெறும் பொம்மையாக ஆட்களை நிறுத்திவிட்டால், குழு எப்படி ஆவது?

திறமை: பந்து, எப்படியெல்லாம் எதிர்க்குழு முன்னோட்டக்காரா்களால் ஆடப்படுகிறது? எப்படிச் சென்றால் எதிர்த்தாடி தடுக்கலாம் என்ற நினைவுடன் முன்னெச்சரிக்கையாக ஆடவேண்டும். 'இப்படித்தான் அந்தப் பந்தை தடுத்தாடச் செல்கின்ற மனப்பாங்கு சமயோசிதப் புத்தியும், சாமர்த்தியமும் வேண்டும். அங்குமிங்கும் அடிக்கடித் திரும்பி, வளைந்து, குனிந்து ஆடுதற்கேற்ற உடல் நலத்திறனும், நெஞ்சுரமும் உள்ளவளா்களாகவும் இருக்க வேண்டும்.

ஓட முடியாதவர்யாராக இருந்தாலும், இந்த ஆடவா்களமிடத்தில் (Position) இருந்து வெற்றிகரமாக ஆக்க முடியாது. ஏனென்றால், இந்த ஆட்டம் விரைவாக ஒட்டத்தாலும், வேண்டிய அளவு பந்துக் கட்டுப்பாடுடன் வழங்கும் முறையினாலும் அனுப்படுகிற, என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

எதிர்க்குழு முன்னாட்டக்காரா்கள் பந்தை தங்களுக்குள் வழங்கிக் கொண்டு ஆடும்பொழுது, பாய்ந்து சென்று தடுக்கவும், இலக்குக் காவலா் சிலசமயங்களில் முன்னால் ஓடிச் சென்று பந்தைத் தடுக்க முனையும்