பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

காக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கும் இருவர் இடைக்காப்பாளா்கள்’ என்பதாக அழைக்கப்படுகிறாா்கள்.

இவர்களின் தடுக்கும் முயற்சி தவறிப்போனால். இலக்குக் காவலர் பந்தைத் தடுத்து நிறுத்துவது என்பது மதில்மேல் பூனை போன்றதுதான். காவலர் தடுத்து நிறுத்தினாலும் நிறுத்தலாம்; முடியாமற் போனாலும் போகலாம். அங்கு நடப்பது அந்த சூழ்நிலையின் தன்மையைப் பொறுத்ததே!

எதிர்க் குழுவின் முன்னாட்டக்காரா்கள் மேற்கொள்கின்ற முற்றுகை நிறைந்த முயற்சிகளை, தீவிரத் திட்டங்களை திடீா்த் தாக்குதல்களை தகர்த்தெறிந்து முறியடிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள் தகுதியை, இனி காணலாம்.

தகுதிகள்:— நல்ல உடற்கட்டும், உடல் திண்மையும், உயரமான அமைப்பும் உடையவரே இந்தப் பணியை ஏற்கவேண்டும். அப்பொழுதுதான் இலக்கினைக்காத்து ஆடுவதற்கு எளிதாக இயல்பான முறையில் அமைந்திருக்கும். எதிராளிக்கும் எளிதாக முன்னேறி வருவதற்குரிய அச்சத்தினை விளைத்து அயர்வினைக்கொடுக்கும்.

உடற்கட்டு, திண்மை என்றவுடன், சதைக்குன்று போல நல்ல குண்டான ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் தவறான முறையில் நம்பிக் கொண்டு, அதேநிலையில் கனத்த ஆட்களைப்பொறுக்கி யெடுத்து, கடைக் காப்பாளா் என்று கோலைக் கொடுத்து நிறுத்திவிடுகின்றனா். இது தவறான நினைவாகும், நிறைவேறாத செயலாகும்.