பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

முனை அடி, தண்டமுனை அடி எடுக்கப்படும் பொழுது, இலக்கின் கடைக்கோட்டை விட்டு காலடி (Step) முன்னே வந்து நின்று விட்டால், இலக்கின் முழு எல்லை பரப்பளவைக் காக்கும் அளவுக்கு வித காப்புத் தன்மை ஏற்படுவதுடன், பந்துபோகின் இலக்கின் கோணத்தின் அளவும் குறைந்து, காப்பதற்கு எளிதாக இருக்கும்.

எதிராளிகளின் திறமையால், காக்க முடியாமல் பந்தை இலக்கினுள் விட்டிருக்கலாம். அல்லது தனது தவறுதலாலேயே போகவிட்டிருக்கலாம். எதிராளிக்கு வெற்றி எண் (Goal) தரக்கூட காரணமாக விட்டிருக்கலாம். அதற்காக அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு,கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது மீண்டும் அதுபோன்ற இழப்புநிலை வராமல் கருத்துட ஆடுவது தான் வீரருக்கு அழகாகும்.

கடினமான காவல் பணியை மே ற்கொண்டிருப்பதால், எஃகு போன்ற உடலமைப்பு, எதற்கும் அஞ்சாத உழைப்பு,விரைந்து பெறும் முன்னறிவுச் சிறப்பு நினைப்பதற்கேற்ப நெகிழும் அவயவ ஒத்துழைப்பு நிறைந்தவர்களே சிறந்த இலக்குக் காவலராக விளங்க முடியும் என்பதால், அதிகப் பயிற்சியும் முயற்சியும் நிறைந்தவர்களே இத்தகைய இடத்திலிருந்து ஆட முடியும்.

நீங்களும் முயற்சி செய்யலாம், நிச்சயம் புகழினைக் கொய்யலாம்.

2. கடைக் காப்பாளா்கள் (Full Backs)

பின்னால் இலக்குக் காவலருக்கும், முன்புறம் ஆடும் இடைக்காப்பாளா்களுக்கும் இடையே, தம் இலக்கினைக்