பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

இலக்குவின் மத்தியில் நின்று தடுக்க முயலும் பொழுது, எந்தத் திசையில் பந்து வந்தாலும், அந்தப் பக்கத்திற்கு ஏற்றாற்போல, வாய்ப்புள்ள காலை வகைகளாள நீட்டித் தேக்குதற்குத் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு தேக்கும் பந்தினை, உடனடியாக அடிக்கும் வட்டத்திற்கு வெளியே போய் விடுமாறு அனுப்பும் முறைதான் பத்திரமான ஆட்டமாகும்.

பந்தானது எதிராளியிடமிருந்து எந்தத் திசையிலிருந்தும் வரும். எதிர்பாராத கோணங்களில் (Angle) இருந்தும் வரும். ஆகவே, திடீரென்று இயங்கக்கூடிய இயக்க நிலையிலேயே (Move) எப்பொழுதும் இருக்க வேண்டும்.

இலக்குக் காவலர், தனக்கு முன்னே இருக்கும் தனது கடைக் காப்பாளா்களுடன் அவ்வப்பொழுது கலந்து பேசிக்கொண்டு, எதிராளிகளை எப்படித் தடுத்தாடுவது என்று திட்டமிட்டுத் தீர்மானித்துக் கொண்டு, அதற்கேற்றவாறு முடிவெடுத்து ஆடுவது சிறந்தது. அதே சமயத்தில், கடைக்காப்பாளா்கள் தடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று தனக்கு முன்னால் நின்றுகொண்டு ஆடுகளத்தினைப் பார்க்கின்ற காட்சியைத் தடுக்கும் வகையில் ஆட முயல்வதையும், நிற்பதையும் அனுமதிக்கக்கூடாது.

எதிாிகளிடம் பந்து இருக்கும் பொழுது, இலக்குக் காவலர் அவசரப்பட்ட, படபடவென்று முன்புறமாக ஓடி வந்து, பந்தைத் தடுக்க முயலக் கூடாது. எதிாியின் இயக்கத்தைப் பாா்த்த பிறகு, நிதானத்துடனும் நெஞ்சுரத்துடனும் இருந்து இலக்கைக் காக்கவேண்டும்.

வளைகோல்-5