பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

முன்னே கூறிய உயரத்திற்கு மேலே, பந்து இன்னும் மேலே வரும்பொழுது, கோலால் தடுத்து ஆடலாம் என்று தோள்களின் உயரத்திற்கு மேல் கோலைக் கொண்டு போகக் கூடாது. மற்ற ஆட்டக்காரர்களுக்குரிய ‘கோல் விதி’ காவலருக்கும் உண்டு என்பதை எப்பொழுதும் மறந்துவிடக் கூடாது.

ஆகவே, கையைப் பயன்படுத்தி காவலர் எப்பொழுதும் தயாராக ஆடவேண்டும். முரட்டுத்தனமாக அடிபட்டு வேகமாக வரும் பந்தைக் கோலாலும் காலாலும் தடுத்தாட வேண்டும்.

தரை புல்லடர்ந்ததாகவோ அல்லது மழை நீரை தோய்ந்து ஈரத்தரையாகவோ இருந்தால், பந்தைக் காலால் தேக்கி ஆடுவதற்குப் பதிலாக, கையிலுள்ள வளைகோலால் தடுத்து ஆடுவதுதான் பாதுகாப்பான ஆட்டமாகும். ஏனென்றால், ஈரப் பந்தானது, கால் உறைகளில் மோதி எந்தப் பக்கம் சுழன்று போகும் என்பதை உணரவே முடியாமற் போகும். ஆகவே, நிலைமையை அனுசரித்து ஆடிப்பழக வேண்டும்.

எதிரிகள் பக்கத்திலே நிற்கவில்லை யென்றால், பந்தைத் தடுத்து நிறுத்தி, பின் உதைத்துத் தள்ளி அனுப்பிவிடலாம். அல்லது அடித்தும் அனுப்பலாம். எப்படியிருந்தாலும் அனுப்புவதற்கு முன், பந்தை நிறுத்திப் பின்பு ஆடுவதுதான் சிறந்த முறையாகும்.

தனக்கு நேராக வரும் பந்தை, காலால் உதைத்தாலும் சரி, கோலால் அடித்தாலும் சரி, ஆடுகளத்தின் மையப் பரப்பை நோக்கி அனுப்பி ஆடாமல், பக்கவாட்டில் (Wing) பந்து போவதுபோல் அனுப்பி ஆடுவதுதான் மிகவும் பாதுகாப்பான ஆட்டமாகும்.