பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

பயன்படுத்துவது என்பதில்தான் ஒருவரது புத்திசாலித்தனமும் திறமையும் அடங்கியிருக்கிறது.

தரையோடு தரையாக அல்லது முழங்கால்களுக்குக் கீழாக வரும் பந்தை காலணியாலும், மற்றும் கட்டியிருக்கும் மெத்தைக் கால் உறைகளாலும் தடுத்தாடலாம். அவ்வாறு தடுத்தாடும்பொழுது, இரு கால்களையும் இடைவெளியில்லாமல் இணைத்து நின்றே தடுக்க வேண்டும். இல்லையேல் பந்து காலில் பட்டு, கால்களின் இடைவெளியில் நுழைந்து இலக்கினுள் போய்விடும்.

மார்புக்கு நேராக அல்லது வயிற்றுக்கு மேலாக வரும் பந்தைக் கையால் தான் தடுக்க முடியும். அவ்வாறு ஆயில் தேக்கிய பந்தை சில வினாடிகள் கூட கையிலே தேங்கியிருப்பதுபோல் வைத்திருக்கக் கூடாது. உடனே கையிருக்கும் நிலைக்குக் கீழாகவே பந்து விழுவது போல் தரையில் விட்டு விடவேண்டும். கையால் பந்தைத் தள்ளி ஆடவே கூடாது.

கையால் பந்தைத் தடுக்கலாம். பிடித்து நிறுத்தலாம் என்றதும் உடனே கையில் இருக்கும் கோலைக் தீழே போட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் பந்தைப் பிடிக்க முயலக்கூடாது.

பந்தைப் பிடித்து வைத்துக்கொண்டால், ‘பந்தைப் பிடித்தார்’, என்ற குற்றத்திற்கு ஆளாகி, அதனால் ‘ஒறுநிலை அடி’ (Penalty Stroke) என்ற தண்டனை பெறும்படி நேர்ந்துவிடும். ஆகவே, பந்தைக் கவனத்துடன் கையாளவேண்டும்.

ஒரு கையால் தடுத்த பந்தை, மறு கையால் உள்ள கோலால் தள்ளி ஆடலாம். இல்லையேல் காலாலும் உதைத்தாடலாம்.