பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

‘கருமமே கண்ணாயினார்’ என்று காரியவாதிகளுக்குக் கூறுகின்ற அறிவுரைக்கு ஏற்ப, பங்தே கண்ணாயினாா் என்று காவலர் எப்பொழுதும் தயார் நிலையிலேயே (Alert) இருக்கவேண்டும்.

எதிரிகள் நடமாட்டம், அவர்களுக்கிடையே நடக்கும் பந்தின் கைமாற்றம், தமது குழுவினரின் முன்னேற்றம், தடுமாற்றம், அத்தனையையும் முறையா அறிந்துகொண்டு, அதற்கேற்ப தன் சக ஆட்டக்காரா்களையும் ஊக்குவித்து உற்சாகத்துடன் ஆடத் துாண்டுவதுடன், தானும் பதட்டப் படாமல், எதிரியின் முயற்சியையும் முற்றுகையையும் தடை செய்யவும், உடைத்தெறியவும் போன்ற நிலைக்குத் தயாராக இருந்து ஆடவேண்டும். இதனை செய்கின்ற விரைவு, செயலில் இருக்க வேண்டும்.

தைரியம், தன்னம்பிக்கை, முன்னுணரும் அறிவு திடீரென்று இயங்கும் ஆற்றல், சுறுசுறுப்பு, படபடப்பு இல்லாத செயல் வேகம் போன்ற அதியற்புத குண நலன்கள் கொண்ட, தகுதியும் திறமையும் உடைய இலக்குக் காவலராக நீங்கள் மாறவேண்டும்.

இனி, வருகின்ற பந்தை எவ்வாறு தடுத்து விளையாட வேண்டும் என்ற வழிமுறைகளையும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலக்குக் காவலர் இரு கால்களாலும் பந்தைத் தடுக்கலாம். உதைக்கலாம். தன் கைகளால் பந்தைத் தடுக்கலாம். தேக்கலாம். அதேபோல தனது வளைகோலால் பந்தை நிறுத்தலாம். தள்ளலாம் அடித்தாடலாம். ஆனால், எதனை எந்த சமயத்தில்