பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பந்தை வேகமாகவும் அடிக்கக் கூடாது. மெதுவாகவும் நகர்த்தக் கூடாது. ஆகவே, வேண்டிய பொழுது வேண்டியவாறு வசதியுடன் வழங்கி, முன்னாட்டக்காரா்களை விறுவிறுப்புடன் ஆடுமாறு ஊக்குவித்து உற்சாகப்படுத்துவது இவரது அரிய பணியாகும்.

தள்ளி ஆடுவது (Push). குடைந்தாடுவ்து (Scoop) போன்ற முறைகளில் ஆடித்தான் இவர் பந்தை பாங்கருக்கு வழங்கவேண்டும்.

ஆட்டத்தின் தலையாய பணியுடன், தெளிவான முயற்சியுடன் ஈடுபட்டிருக்கும் மைய இடைக்காப்பாளா் உடலாலும் மனத்தாலும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். விரைந்து சிறந்த முடிவு எடுத்தல் அவ்வாறு உணர்ந்த முறையில் உரிய வழியில் இயங்குதல்; தனது குழுவினர் அனைவரையும் முழுமையாகப் பயன்படுத்துதல்; எப்பொழுதும் உணர்ச்சிவசப்படாமல் இருத்தல்; அங்குமிங்கும் அனாவசியமாக அலையாமல் தன் ‘ஆடும் இடம்’ காத்து ஆடுதல் போன்ற தலையான குணங்களை தகுதிகளாக வளா்த்து ஆடவேண்டும்.

4. முன்னுட்டக்காரா்கள் (Forwards)

ஆட்டத்தின் நோக்கமானது வெற்றி பெறுவது என்றால், எதிரிகள் காத்து ஆடுகின்ற இலக்கினுள் பந்தை விதிக்குட்பட்டு, அடித்து வெற்றி எண் பெறுவதுதான் லட்சியமாகும்.

அந்த அரிய முயற்சியில் முற்றிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்கள் முன்னாட்டக்காரர்கள்தான். அவர்களின் குழு ஒற்றுமை, சீரான இயக்கம், எதிரியை