பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

மாற்றும் தந்திரம், பந்தினைப் பக்குவமாக, பத்திரமாகத் தங்களுக்குள் வழங்கிக்கொண்டு, அடிக்கும் வட்டத்திற்குள் பந்தைக் கடத்திச்சென்று, குறி தவறாது எதிரி இலக்கிற்குள் பந்தை அடிக்கும் தகுதியே அவர்களுக்குப் பெருந் தகுதியாகும்.

முட்டத் தெரியாத மாடும், பாயத் தெரியாத புலியும், ஓடத் தெரியாத மானும், ஒளிந்துகொள்ளத் தெரியாத முயலும் பிறர் பரிகாசத்திற்கு ஆளாவதுடன் பலியாகவும் கூடுமல்லவா !

அதேபோல்தான், அடிக்கும் வட்டத்திற்குள் அபாரத் திறமையுடன் கொண்டுவந்த பந்தை, இலக்கினுள் அடிக்காமல் வெளியே அடிக்கும் தன்மையும் ஆகும். எனவே, இவர்களுக்கு மிக முக்கியமான தேவையானது கோல் ஆட்சித் (Stick work) திறனேயாகும்.

5. மைய முன்னாட்டக்காரர் (Centre-forwrrd)

இவரது ஆடுமிடம் மிகவும் கிக்கலான, அதே சமயத்தில் பெரும் பொறுப்பு நிறைந்த இடமாகவும் இருக்கிறது.

இவர் சரிவர ஆடவில்லையென்றால், அன்றைய ஆடடத்தின் வெற்றியே சரிந்துதான் போகும். ஆட்டக்காரா்களின் உற்சாகமும் குறைந்துபோகும். வண்டிக்கு அச்சானிபோலத்தான் இவர் விளங்குகிறார்.

முக்கியமான இடத்தில் இருந்து ஆடுகின்ற இவர், மற்ற முன்னாட்டக்காரா்களுக்குத் தைரியம் ஊட்டி ஆடச் செய்வதுடன், தக்க நேரத்தில் அறிவுரை தந்து ஆட்டுவிக்கவும் வேண்டும்.