பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


முடிந்த வரையில், தனது பாங்கர்களுக்குப் பந்தை உடனே வழங்கி, விரைவாக எதிர்க்குழு இலக்கி நோக்கி முன்னேறுவதுதான் சிறந்த ஆட்ட- முன் யாகும. ஆட்டத்தில் விரைவினை ஏற்படுத்துவது அடிக்கடி பாங்கர்களுக்குப் பந்தை வழங்கும் முறையில்தான் ஏற்படுத்த முடியும். ஆகவே, ஆட்டக்காரர்கள் விரைவான ஆட்டம் ஆட முதலிலிருந்தே தொடங்கிவிட வேண்டும். அதற்கான பயிற்சியை, குழுவினர் பல காலம் பயிற்சி செய்திருந்தால்தான் முடியும். அத்தகைய பயிற்சி, குழுவின் பெருமையை உயர்த்துவதோடு ஆட்டக்காரர்களின் திறமையையும் மிகுதிப்படுத்தி, மேம்பாடடையச் செய்யும்.