பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆடப் பயன்படும் சாதனங்கள் ஆடுகள அளவு : விளையாட இருக்கும் ஒவ்வொரு குழு விலும் 11 ஆட்டக்காரர்கள் இருக்க, அவர்கள் முற் பகுதியில் கூறியுள்ளபடி, 1 இலக்குக் காவலர்,2 கடைக் காப்பாளர்கள், 3 இடைக்காப்பாளர்கள்,5 முன்னட்டக் காரர்கள் என்றவாறு பிரிந்து, அவருக்குரிய இடத்தில் நின்று விளையாடுகின்ருர்கள். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும், தனிப்பட்ட முறை யில் ஒவ்வொரு வளைகோல் உண்டு. அவ்வாறு விளை யாட இருக்கின்ற கோலின் மொத்த எடை 12 அவுன் சுக்குக் குறையாமலும், 28 அவுன்சுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அந்தக் கோலின் இடது கைப்பக் கத்தில் மட்டுமே தட்டையான பாகம் இருக்க, உட்புறத் தில் 2 அங்குல விட்டம் உள்ள வளையத்திற்குள் நுழைந்து செல்லுமாறு அதன் அமைப்பு இருக்க வேண்டும். ஆட்டக்காரர்கள் அணிகின்ற காலணிகளை, மற்ற ஆட்டக்காரர்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடும் என்று நடுவர் கருதாத அளவுக்கு அணிந்திருக்க வேண்டும்.