பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


ஆடப் பயன்படுகின்ற வெள்ளை நிறப் பந்தானது. சாதாரண கிரிக்கெட் பந்தினைப் போல, உள்பால் தக்கையாலும் (Cork) முறுக்கேறிய கெட்டி நூலாலும் (Twin) செய்யப்பட்டு, 5; அவுன்சுக்கு குறையாத ៩ அவுன்சு எடைக்கு மிகாதவாறு அமைந்திருக்குக் அதன் சுற்றளவோ 9: அங்குலத்திற்கு மிகாமலும் 8.1 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் Ա இவ்வளவு சாதனங்களுடன் ஆடவிருக்கும் ஆடு களத்தின் அளவானது நீளம் 100 கெஜமும், 60 கெஜத்திற்கு மிகாத 55 கெஜத்திற்குக் குறையாத அகலமும் உடையதாக விளங்குகிறது. கால் பந்தாட்டத்தில் இலக்கினுடைய அகலமானது 8 கெஜம் என்றல் இதனுடைய இலக்கின் 4 கெஜ அளவு அகலமும் 7 அடி உயரமுமாகும். 2. ஆடுகின்ற கால அளவு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, இரண்டு குழுக்களின் தலைவர்களும் இணங்கிப் பேசி ஒத்துக் கொண்டிருந்தால் ஒழிய, ஆடும் கால அளவானது பருவத்திற்கு (Period) 35 நிமிடங்களாக, இரு பருவங்கள் இருக்க வேண்டும். முதல் பருவம் முடிந்து, அடுத்த பருவம் தொடங்குவதற்குள் இருக்கின்ற இடைவேளையின் கால அளவு 5 நிமிடத்திற்கு மேல் போகக் கூடாது. ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னர், இரு குழுத் தலைவர்களும் இணக்கத்துடன் ஒத்துக் கொண்டால் ஒழிய, எந்த நிலையிலும் இடைவேளை நேரம் 10 நிமிடங்களுக்கு மேல் போகக் கூடாது. لتتك L-Tـدى5