பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


இமாற்றள்முறை (Substitution): ஆட்டத்தின்போது ஒரு நழுவிலிருந்து 11 ஆட்டக்காரர்களே ஆடுகளத்தில் இறங்கி ஆடலாம். ஆனால், இப்பொழுது புதிய முறையாக 2 மாற்றளை ஆட அனுமதிக்கலாம் என்ற விதியையும் இனத்திருக்கிறார்கள். அதன் வழி, இரண்டு மாற்றங்களையும் போட்டி ஆட்டத்தின் போது மாற்றுதற்கு, நிரந்தரமாக ஆடும் இரண்டு ஆட்டக்காரர்களை வேறு எந்த காரணத்திற்காக வேணும் மாற்றிவிட்டு, ஆடுகளத்தில் இறங்கி விளையாட அனுமதிக்கலாம். அவ்வாறு அனுமதிப்பதானது, ஒருமுறை மாற்றங்களே ஆடுவதற்கு இடமளித்துப்போன ஒரு நிரந்தர ஆட்டக்காரர் (Regular Player), மீண்டும் தான் வந்து அவரை வெளியே போகச் செய்து ஆட முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், தற்காலிகமாகவோ அல்லது ஆட்டத்துல இனிமேல் கலந்து கொள்ளக் கூடாது என்று நடுவரால் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரருக்குப் பதிலாக, வேறு ஒரு மாற்றளை ஆடுகளத்தில் இறங்கி ஆட அனுமதிக்க முடியாது என்பதையும் குழுவின் கண்காணிப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். விதிமுறைக்கேற்ப, மாற்றளை மாற்றலாம் என்றாலும், நினைத்த நேரத்தில், ஆட்டத்தை நிறுத்தி விட்டு, நடுவரை அழைத்து மாற்றளை உள்ளே அனுப்ப யாரும் முயலக் கூடாது. பந்து ஆடுகளத்திற்கு வெளியே போயிருக்கும் பொழுது, அல்லது இடைவேளை நேரத்தின்போது,