பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


என்பதால்தான், பந்தின் மேல் கூரிய கண்ணுேட்டமும். கேரிய கருத்தோட்டமும் தேவை என்கிருேம். m ஆகவே, தவறின்றி அடிப்பதற்கு, கோலை பின் புறம் ஓங்குவது அதிக அளவு இல்லாமல், சிறிது தூரம் பின்னே கொண்டு சென்ருல், போதுமானது. இப்படி யால்ை, பந்தை எப்படி வேகமாக அடிக்க இயலும் என்ற ஐயம் எழும். அதற்குரிய விளக்கம் என்ன வென்ருல், வலிய மணிக்கட்டுகளையும், வளமான முன் கைகளையும் உடையவராக விளங்கில்ை மட்டுமே, அவ்வாறு அருமையாக அடித்தாட முடியும். இதுபோன்று அடிப்பதற்கு முன், கோலைப் பிடிக் கின்ற முறையையும் (rேip) கற்றுக்கொள்வது அவசிய மாகும். இடது கை, கோலின் தலைப்பாகத்திலிருந்து சற்று ஏறக்குறைய மூன்றங்குலமுள்ள பரப்பளவில் பிடித் திருக்க, வலது கை, கோலின் தலைப்பாகத்திலிருந்து சுமார் 18 அங்குலம் தள்ளி இருப்பதுபோல் பிடித்திருந் தால், ஏற்றதாக இருக்கும் என்பது பயிற்சி தரும் பண்பாளர்களின் கருத்தாகும். அதே சமயத்தில், இரண்டு கால்களையும் இணைத்து வைத்து, அதற்கிடையிலேயே விரிந்துள்ள பாதங்களுக்கு நடுவே உள்ள இடத்தில், கோலே விறைப்பாக நிறுத்தி, இடதுகை கட்டைவிரல் வலது கையைப் பார்ப்பதுபோல், பிடித்திருப்பதும் நல்லது என்பார்கள் வல்லுநர்கள். நிறுத்தி வைத்திருக்கும் பந்தை அடிக்கின்ற போது கோலின் தலைப்பாகத்திலிருந்து 3 அல்லது 4.