பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


அங்குல தூரத்தில் இடதுகை இருக்க 12லிருந்து 18 அங்குலம் வரை துார முள்ள இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வசதியானவாறு பிடித்துக்கொண்டு, இடது காலை முன்னே வைத்து, பின்புறமாகக் கோலைச் கொண்டு சென்று, பின்னர் விசையோடு கொணர்ந்து விரைந்து அடிக்க வேண்டும். விரைப்பாக கோலை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டால், பந்தை வேகமாக அடிக்க முடியாது. இப்படியும் அப்படியும் திரும்பவும், திருப்பவும் போன்ற முறையில் வசதியாக இருக்குமாறு தளர்த்திய நிலையில் பிடிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அதையும், நன்றாகப் பந்தினைக் குறியுடன் அடிக்கும்பொழுது, எந்தப் பக்கம் பந்து போக வேண்டும் என்று விரும்புகின்ற பக்கம் பார்த்தபடியே அடிக்கவும். அது எதிராளிக்குத் தெரிந்துவிடும் என்பதால், பந்தைப் பார்த்தவாறு, பந்தின்மேல் கருத்தூன்றி அடித்து அதனை நினைத்த திசைக்கு கையினால் திசை திருப்பும் முறையையும் பயிற்சியின் மூலமாகவே பெறமுடியும். இவ்வாறு அடித்தாடும் முறையை முன்று விதமாக பிரிப்பார்கள் ஆட்ட வல்லுகர்கள். அந்த முறையையும் அமைப்பினையும் இனி விளக்கமாகக் காண்போம். மின்னல் அடி (Flick): பந்தை ஓங்கி அடிக்காமல், மின்னல் வேகத்தில் அடித்துத் தள்ளி அனுப்பி விடுவ தற்குத்தான் மின்னல் அடி முறை என்கிறோம். இவ்வாறு விரைந்தோடும் வேகத்திற்கு, தோள் பகுதியிலிருந்துவரும் சக்தியின் உதவியால், மணிக்