பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


எறிந்தாடல் (Scoop): இந்த ஆட்டமுறை, கொஞ்சம் பயங்கரமான ஆட்டத்தை ஏற்படுத்துகின்றவாறு அமையும். . தான் பிடித்திருக்கும் கோலுக்குக் கீழே, வலது கையை முழுவதுமாகக் கொண்டு சென்று, பந்தை அப்படியேத் தள்ளி மேல் நோக்கித் துாக்கி எறிந்து ஆடுவதே ஆட்ட முறையாகும். இந்தத் திறன் நுனுக்கத்தால் பந்தைத் தரையோடு தரையாக அனுப்புவதற்குப் பதிலாக, மேலாக (in the air) பந்தைக் குடைந்தாடி தூக்கியெறிந்து அனுப்பும் லாகவ முறைக்கு கீழே கூறப்பட்டிருக்கும் பந்தைத் தள்ளி ஆடல் முறைக்குப் பொருந்துகின்ற கைப்பிடி முறையையே பின்பற்றலாம். இவ்வாறு ஆட முயலுவோர், வளைகோலானது தனது உடம்புக்கு மிக அருகாமையில் இருக்குமாறு வைத்துக்கொண்டு, பிறகு பந்துக்குப் பின்புறம் வளை கோலின் தட்டைப் பகுதியை வைத்து, வலதுகை மணிக்கட்டின் விசையோடு பந்தைத்துாக்கி எறிந்தாட வேண்டும். இதனைச் சிறப்புடன் பொறுப்புடன் செய்தால் தான், எதிர்பார்க்கும் பயனும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பந்தை வெற்றிகரமாகவும் வேகமாகவும் முன்னோக்கி எடுத்துக்கொண்டு சென்று, முன்னேறிப் போகின்ற தன்மையில், பந்தை முன்னும் பின்னும், வளைகோலுடன் ஒட்டியிருப்பது போலவே பந்தைத் தள்ளி விடுவதும், தட்டி விடுவதும் மிக அருமையான வழிகளாகும்.