பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


மேற்கூறிய முறையில் ஆடும்பொழுது, 20 பலது 24 அங்குல தூரத்தில் பந்து இருப்பதுபோல இருகுமாறு பார்த்துக்கொண்டு, 20 அல்லது 24 அங்குலம் வரை கோலின் தலைப்பாகத்திலிருந்து கீழ் வரையில் உள்ள கோலிடத்தில் பிடித்துக்கொண்டு, டலை சிறிது முன்னோக்கி வளைத்தவாறு, வலது கையை முழுமையாகப் பயன்படுத்தி, இடது கை த்துழைக்க பந்தை முன்னும் பின்னும் இழுத்து ஆடவேண்டும். இத்தகைய திறன் தான் வளைகோல் பந்தாட்டத்திற்கு வேண்டிய மிக முக்கியமான திறனுகும். அதிகப் பிற்சியே அற்புதமான ஆட்ட அழகினைக் கொடுக்கும். பரண்பரையும் கவர்ந்திழுக்கும். தள்ளி ஆடல் (Push) ; தள்ளி ஆடல் என்பது ந்தை அடித்தாடும் விதத்தில் பரிபூரணமான சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதாகும். இதன் மூலமே, ஒரு ஆட்டக்காரர் தன் பாங்கருக்குப் பந்தை விரும்பிய பழியில் எளிதாக வழங்க முடியும். தள்ளி ஆடி வழங்கும் பொழுதுதான், குறிப்பிட்ட ஒரு மிதமான கட்டுப்பாடமைந்த வேகமும், குறிபார்த் துக் கொடுத்தாடுகின்ற லாவகமும் மிகுதியாகக் கிடைக்கின்றது. - பந்தானது தன்னிடமிருந்து 18 லிருந்து 24 அங்குல தூரம் வரை இருப்பதுபோல் வைத்துக் கொண்டு, கோலின் தட்டையான பகுதியால், பந்தின் அருகில் வைத்து, வலது கையும் தோள் பகுதியும் சிறிது சரிந்தவாறும் சாய்ந்தவாறும் இருக்க, வலது கை மணிக்கட்டுப் பகுதியின் வலிமையால் முன்னோக்கித் தள்ளி ஆடவேண்டும். .