பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வளைச் செட்டி இந்தத் தடவை வட்டியும் முதலும் என்பதில் அவள் கண்கள் சிலேத்து கின்றன. அதை மீட்டும் மீட்டும் படித்தாள். அவள் உடம்பு புல்லரித்தது. அவள் வாயிதழ் மலர்ந்து முல்லை மென்னகையைப் புறப்பட விட்டது. மறு படியும் சிந்தனையுலகப் பிரயாணம் தொடங்கியது. ★ அவள் காலேஜில் இண்டர் இரண்டாம் ஆண்டு படித் துக்கொண்டிருந்த வருஷம், மேரி ராணி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரிக்குப் போய்விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு வருகிறவள் அன்று ஒர் ஆசிரியையோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட் டாள். மற்றப் பெண்களெல்லாம் போய்விட்டார்கள். ஆசிரியையுடன் பேசிவிட்டுப் புறப்பட்டாள். வழக்கமாக உடன் வருகிற பெண்கள் யாரும் இல்லை. தனியே காலேஜ் வாசலில் வந்து கின்ருள். 21-பி. பஸ்ஸை எதிர் நோக்கி கின்று கொண்டிருந்தாள். ஐந்து கிமிஷத்தில் பஸ் வந்தது. ஏறி சின்ருள். பஸ் போய்க் கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கட் கொடுத்துக்கொண்டு வந்தான். கமலாவிடம், "டிக்கட்” என்று கேட்டபோது அவள் தான் போகும் இடத்தைச் சொல்லி ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினள். கண்டக்டர், "நான் அப்போதிலிருந்து கத்திக்கொண்டு வருகிறேன், சில்லறையில்லே என்று. நீங்கள் இதை நீட்டு கிறீங்களே' என்று சள்ளென்று விழுந்தான். அவளுக்கு அவன் சொன்னது தெரியாது என்பதை யெல்லாம் கினேக்க அவனுக்கு அவகாசம் ஏது? அவனுடைய அலுப்பு அவனுக்குத் தெரியும். "பாரப்பா; சில்லறை இருக்கும். என்னிடம் இருங் தால் கொடுக்க மாட்டேன?' என்று கெஞ்சும் தொனி யில் கமலா சொன்னள்.