பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146; வளைச் செட்டி "இல்லை, இல்லை. எனக்குச் சில்லறை வேண்டும்' என்ருள் அவள். . "என்னிடமும் சில்லறை இல்லையே! இரண்ட ணுக் கொடுத்து நான் ஏழையாகப் போவதில்லே'என்ருன் அவன். அவளுக்கு மேலே பேச ஒன்றும் தோன்றவில்லை. 'நீங்கள் யார்? உங்கள் விலாசம் என்ன?’ என்று கேட்க வேண்டுமென்று கினைத்தாள். அத்தனை பேருக்கு நடுவில் அப்படிக் கேட்பதற்கு லஜ்ஜையாக இருந்தது. அதோடு அந்தப் போக்கிரிக் கண்டக்டர் வேறு அவர்கள் இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தான். என்ன செய்கிறது என்று புரியாமலே அவள் கின்று கொண்டிருந்தாள். 'உட்காருங்கள், இங்கே" என்று அந்த இகளஞன் சொன்னன். அவள் உட்காரவில்லை. அவளே வெட்கம் பிடுங்கித் தின்றது. அங்கே விற்பதே மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நடுவிலே இறங்கி விடலாமா என்று கூடத் தோன்றியது. அதற்குள் அவன் நடுவில் ஓரிடத்தில் இறங்கினன். அவனுக்குத் தன் நன்றியை கன்ருகத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருந்தது. எப்படித் தெரிவிப் பது? அவன் பெயர்கூட அவளுக்குத் தெரியாதே! அவன் போய்விட்டான். அவன் போவதை அவள் பார்த்தாள். சில கணமே அப்படிப் பார்க்க முடிந்தது. அதற்குள் அவன் கடையிலே உள்ள அழகை அவள் மனக் கண்ணிலே படம் பிடித்துக் கொண்டாள். பஸ் புறப்பட்டு விட்டது. அவளும் உட்கார்ந்து கொண்டாள். இப்போது அவள் தவியாகத் தவித்தாள். அவரிடம் விலாசத்தைக் கேட்டிருக்கலாம். பிறகு அப்பாவிடம் சொல்லி ஒரு கடிதம் எழுதச் சொல்லி யிருக்கலாம். அவர் யாரோ? என்ன பண்ணுகிருரோ? இந்த ஜன சமுத்திரத்