பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வளைச் செட்டி வேம்பிலிருந்து பிரித்ததுதான் அவருடைய சாமர்த் தியம்.” - 'இல்லை, இல்லை. அவர் வேப்பம் பூப் பறிக்கப் போனர். வருஷப் பிறப்பில் வேம்படியாளின் வேப்பம் பூ அவருக்கு உதவவில்லை. அந்தக் குறையையும் நாம் போக்கி விடலாம். நீ வேம்படியாள் கோவிலில் வேப்ப மரங்களே நடு. வருஷப் பிறப்புக்கு அந்தப் பூவையே நம் வீட்டில் உபயோகிக்கலாம்.' - இந்த யோசனை என் தந்தையாருக்கு மிகவும் உசித மாகப் பட்டது. அவர் தம்முடைய யுக்தியால் மற்ருென் றையும் சேர்த்துக் கொண்டார். வேம்படித் திடல் வேம்படி வயலாகி யிருந்த தல்லவா? அந்த வயலில் கரும்பு போட் டிருந்தார். அந்தக் கரும்பிலிருந்து வெல்லம் காய்ச்சினர். என் பாட்டி உயிரோடு இருந்தபோதே, வேம்படியாள் கோவில் வேப்பம் பூவையும் வேம்படி வயல் வெல்லத்தை யும் சேர்த்துப் பச்சடி செய்தார். என் பாட்டனரின் வாழ்க்கையின் ஆரம்பம் வேம்பு. அதன் வெற்றி வெல்லம். இரண்டையும் கலந்து என் பாட்டியின் ஆசீர்வாதத்தைப் பெற்ருர் என் தகப்பனர். அது முதல் வேம்படியாள் கோவில் வேப்பம் பூவே எங்கள் வீட்டு வருஷப் பிறப்புக்கு உபயோகப்பட்டு வருகிறது. வேம்படி வயலில் கரும்பு போட்டிருந்தால் அந்த வெல்லத்தைச் சேமித்து வைத் திருப்போம். வருஷப் பிறப்பில் உபயோகப் படுத்து வோம். :★ "எங்கே, இன்னும் கொஞ்சம் அந்தப் பச்சடியைக் கொண்டு வா" என்று உத்தரவிட்டான் நாராயணன். என் இலையில் மீண்டும் வந்த அந்தப் பச்சடியைக் காவியத்தை ரசிப்பதைப் போல ரசித்து ருசி பார்த்தேன்.