பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் 159 மனைவியைப் பலி கொண்டுவிட்டாள் என்ற செய்தியை அவள் கேட்டபோது, தனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் அவளுக்கு இருந்தது. அதல்ை ஒவ்வொரு வெள் வளிக்கிழமையும் வேம்படியாள் கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவரத் தவறியதியல்ல. 'தாயே, எங்கள் அபசாரங்களே யெல்லாம் பொறுத்துக் காப்பாற்ற வேன்டும்” என்று பிரார்த்தனை செய்வாள். அவள் மனசில் இருந்த குறையை என் பாட்டனரி டம் சொல்ல அவளுக்குத் தைரியம் இல்லை. வேம்படியாள் கோவிலில் வேப்பமரம் கடவேண்டும் என்ற விருப்பத்தை அவள் என் தகப்பனர் மூலம் கிறைவேற்றிக் கொண்டாள். 'உன்னுடைய தகப்பனரைப் போலத் தைரியசாலி யாரும் இல்லை. வேம்படியாள்தான் அவரைக் காப்பாற்றினுள். அவள் அருள் எப்போதும் உனக்கு இருக்கவேண்டும். அவள் கோவிலில் வேப்ப நிழல் இருக்கவேண்டும். உன் தகப்பனர் வேம்படித் திடலே அழித்ததற்கு அதுதான் பிராயச்சித்தம்' என்று சொன்னுள். "அப்பாவுக்கு வேம்படியாள் மேல் வெறுப்பு இல்லை. வேப்ப மரத்தின் மேல்தான் வெறுப்பு. அதன் பூவை ஒடிக்கப் போய்த்தானே அவர் அடி பட்டார்” என்று கேட்டார் என் தந்தையார். - "அப்படிச் சொல்லாதேய்டா மகனே; வேம்பு என்ன செய்யும்? அன்று அவர் பட்ட அடிதானே அவரை உருப் பட வைத்தது வேம்படியாள் அருளால்தான் அவர் முன்னுக்கு வந்தார். அவள் சங்கிதியில் உணர்விழந்து கிடந்தாரே, அதற்கு இரங்கி அவள் அருள் செய்தாள்’ என்று பாட்டி சமாதானம் சொன்னுள். - 'அவர் ஆத்மாவுக்குத் திருப்தி இல்லாத காரியம் போல இது எனக்குத் தோன்றுகிறது. வேம்படியாளே