பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - வ&ளச் செட்டி படியாள் சும்மா விடுவாளா? பச்சை மரத்தை வெட்டின பாவிக்கு ஏற்ற தண்டனேதான். குழந்தை குட்டி பிறப்ப தற்கு முன்னே மனேவியை அவள் பலி கொண்டு விட்டாள். வேம்படியாள் கண் கண்ட தெய்வம் அல்லவா? இன்னும் என்ன செய்யப் போகிருளோ!' என்று பேசினர்கள். என் பாட்டனர் இந்த வார்த்தைகளைக் கேட்காமலா இருந்திருப்பார் அவர் எதற்கும் அசையவில்லே. இரண் டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டார். வாழ்வில் மீண்டும் மலர்ச்சி ஏற்பட்டது. வியாபாரம் பெருகிற்று. கன்ருகத்தான் வாழ்ந்தார். அவருக்கு ஒரு பிள்ளையும் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். - ★ நாராயணன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். "கதை அவ்வளவுதானே? இதில் வேம்பு எங்கே, வெல்லம் எங்கே?' என்று நான் கேட்டேன். 'இன்னும் கதை முடியவில்லையே! இதோ முடித்து விடுகிறேன். வேம்பும் வெல்லமும் வரும் பார்' என்று சொல்லி நாராயணன் மறுபடியும் தொடர்ந்து சொல்ல லான்ை. * - Yk என் பாட்டனருக்கு ஒரே பிள்ளேயென்று சொன் னேன் அல்லவா? அவரே என் தந்தையார். என் பாட்ட ர்ை காலமானதற்குப் பிறகும் சில வருஷங்கள் என் பாட்டி உயிருடன் இருந்தாள். என்னதான் என் பாட்ட ஞர் தைரியசிாலியாக இருந்தாலும், அவர் மனைவி பெண் தானே? அவளுக்கு மனசில் ஒரு குறை இருந்தது; வேம் படியாளுக்கு வேப்ப மரச் சம்பந்தம் இல்லையே என்ற குறைதான். வேம்படியாள் என் பாட்டனருடைய முதல்