பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பும் வெல்லமும் 15? கெல்லாம் நாசகாலம் வந்துவிட்டதோ, என்னவோ!' என்ருர் சிலர். - ஆனல் நாராயணரிடம் மதிப்புடைய மக்களும் இல் லாமல் போகவில்லை. 'இவர் ஏதாவது ஆச்சரியமான காரி யத்தைத்தான் செய்வார்' என்று அவர்கள் சொன்னர்கள். இந்த ஊரின் கீழ்க்கோடியில் நாராயணர் ஒரு சின்னக் கோவிலைக் கட்டினர். மூன்ரும் பேருக்குத் தெரியாமல் வேம்படியாளே இடம் பெயர்த்து அந்தக் கோவிலிலே குடி யேற்றி விட்டார். "இவன் வாழ்வான? இத்தனை தைரியமாகச் செய். தானே!" என்று அவருடைய விரோதிகள் பேசிக் கொண்டார்கள். என் பாட்டனர் தாம் நினைத்ததைச் செய்துவிட்டார். வேம்படியாளே வேம்பில்லாத இடத்தில் வைத்துவிட்டார். தமக்கு அடி வாங்கித் தந்த பழைய வேப்பமரத்தை வெட்டி அடுப்பெரித்துவிட்டார். அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்? யோசித்துப் பார். - - அதோடு அவர் கிற்கவில்லை. அந்த வேம்படித் திடலையே அழித்து கன்செய் பண்ணிவிட்டார். நெல்லும் கரும்பும் விளேயும் பூமியாக அதை மாற்றிவிட்டார். அதற். காக அவர் செலவிட்ட பணம் கொஞ்சமா நஞ்சமா? எப்படியோ வேம்பையும், அது முளேத்த மண்ணேயுமே. மாற்றி வாழ்க்கையில் வெற்றி கண்டார். ★ - இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஊரார் எசலுக் கும் வசவுக்கும் ஆளானர் எங்கள் பாட்டனர். அன்றும் வருஷப் பிறப்புதான். அன்று நாராயணருடைய மனைவி இறந்து போனள். வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? 'வேம்