பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கிலத்தின் மேல் வாழ்ந்தவர்கள் மட்டும் ஆடி மகிழ்ந்த ஆட்டம் என்ற பெருமை மட்டுமன்றி, நீர் மேல் பயணம், செய்த (கப்பல் பயணம்) பயணிகளுக்குப் பயன்களைத் தந்ததோடு, பேரின்பம் விளேக்கின்ற ஆட்டமாகவும் வளையப் பந்தாட்டம் விளங்கி வந்திருக்கிறது. :

இத்தகைய பெருமை படைத்த விளையாட்டின் வரலாறு பற்றி ஆராய்வோமால்ை, மிகப் பழங்கால ஆட்டம் என்று இதைச் சொல்லிவிட முடியாது. 19ம் நூற்ருண்டில் பிறந்தது என்பதைவிட, 19ம் நூற்ருண்டில் உருவான ஆட்டம் என்று சொல்வதே பொருந்தும்.

உருவான ஆட்டம் என்ருல், இது கூடைப் பந்தாட்டம் கைப்பந்தாட்டம் போல் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டம் என்ற பெருமைக்கு உட்பட்டதல்ல என்பது சொல்லாமலேயே விளங்கும். கடலோரத்தில் மணற்பரப்பு. எப்ப்டி வந்ததென்ருல், காலங்காலமாக இருந்த பாறைகள் காலத்தின் கையால் பொடிபட்டு, அதாவது மழை, புயல், வெப்பம் போன்ற தாக்குதலால் பாறைகள் பொடியாகிப் போனதுதான் என்று பூமியியல் வல்லுநர்கள் விவரிப்பது போலவே, வளையப் பந்தாட்டமும் காலங்காலமாக ஒன்றி லிருந்து மாறி மாறி, மற்ருென்றுடன் மருவி மருவி மாறு பட்டுத் திரிந்து, பிரிந்து பிறகு வளையப் பந்தாட்டமாகப் பிறந்து வந்திருக்கிறது என்பதே பொருந்தும்.

அப்படியானல், இதன் ஆரம்பகாலந்தான் என்ன என்ருல், ஒரு முறையான வரலாமுக விளையாட்டுத் துறையில் உருவான ஒலிம்பிக் பந்தயங்களே நடத்தி, உலக வரலாற்றில் உன்னத இடத்தை வகித்துவந்த கிரேக்க இனத்தையே சாரும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயம் கிரேக்கர்களால் கடத்தப் பெற்றது. கிரேக்கர்கள் மட்டுமே பங்குபெறலாம் என்ற முக்கியமான அவர்களின் விதிமுறை