பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 16. வள்ளலாரது கொள்கைகள் இளமையில் முருகனைக் கடவுளாகவும், திருஞான சம்பந்தரைக் குருவாகவும், திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டு, பின்னர் ஒற்றியூரில் சிவபக்தராகவும் தில்லையில் நடராஜ பக்தராகவும், முடிவில் அருட்பெருஞ் சோதி அடியாராகவும், விளங்கினார். 'கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் சோதியர் சிறு தெய்வ வழிபாடு கூடாது! உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணவேண்டும், ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும், எதிலும் பொதுநோக்கம் வேண்டும், இறந்தவர்களை எரிக் காமல் புதைக்கவேண்டும், ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீடு பெற உதவும்” என்பன அவரது கொள்கைகள். 17. சன்மார்க்கத்தினரின் வேண்டுகோள் 'எல்லாமுடைய அருட்பெருஞ் சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் எவ்விடத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாவண்ணம் அருள் செய்ய வேண்டும். "சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத் தும் எவ்விடத்தும் எள்ளளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந் தலைமை அருட்பெருஞ் சோதி ஆண்டவரே தேவ ரீர் திருவருட்பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்' என வேண்டிக்கொள்வது.