பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} $ 18. அவர் கண்ட நெறிகளில் ஒன்று பெருநெறி' 1. இது ஒரு புது நெறி. நெறி பல வகை. அதில் பெருநெறி ஒரு தனிவகை. நெறி என்றாலே நன்னெறியைக் குறிக்கும். தீ நெறியைக் குறிக்காது. இதை 'நெறி நின்றாடு நீடு வாழ்வார்' என்னும் திருக்குறளால் அறிய gon'th. நெறி என்றால் வழி. அதுவும் நல்வழியையே குறிக்கும். அவ்வழியைக் குறிக்காது. இதனை வழியே ஏகுக வழியே மீளுக' என்பதால் அறியலாம். தி நெறியைக் குறிக்கும் போதெல்லாம் நமது முன் னோர்கள் நெறியல்லா நெறி' என்றே குறிப்பிட்டிருக் கிறார்கள். இது தமிழகச் சான்றோரின் பண்பு. வள்ளலார் தமது அருட்பாவில் பல நெறிகளைப் பற்றிக் கூறியிருக்கிறார், அவற்றுள் பெருநெறி என்பதை அடிக்கடி பல்வேறு இடங்களில் கூறியிருப்பதைக் காணலாம். "பன்னெறிச் சமயங்கள், மதங்கள் எனுமோர் பவநெறி உலகில் பரவியது. இதனால் மக்கள் செந்நெறி அறிந்திலர். இறந்திறந்து உலகோர் செறியிருள் அடைந்தனர். ஆதலின் இனி நீ புன்னெறி தவிர்த்து, வான் புத்தமுது அளிக்கின்ற சுத்த சன்மார்க்கத் தன்னெறி செலுத்துக! என்ற என் அரசே' எனக் கூறியிருக்கின்றார். இதில் பல நெறிகள் வந்துள்ளன. வடலூரில் சத்திய ஞானசபை எட்டுப்பட்டை அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. அதில் எட்டாவது பட்டையில் குருநெறிக்கே என்னைக் கூட்டிக்கொடுத்தது, கூரறிய பெருநெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது, பேயுலகக் கருநெறிக்கே சென்றவர் காணற்கரியது, காட்டு கின்ற திருநெறிக்கே சென்றவர்க் கேற்றது, 'உத்தர ஞான