பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


கொண்டு வந்து எவரும் பலி கொடுப்பதில்லை. ஆகவே தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள் என்பது முடிவு. ஜீவ காருண்யப் பிரச்சாரம் செய்யும் அன்பர்கள், இனி ஒரு புதியமுறையைப் பின்பற்றுவது நல்லது. அவர்கள் இனி உயிர்ப்பலி கூடாது என்று சொல்வதை நிறுத்திக்கொண்டு, காளி கோயிலுக்கும், கருப்பண்ணன் கோயிலுக்கும் சென்று, அம்மையே! ஐயனே! இனி உன் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம் ஆடு, கோழிகளை இனிப் பலி கொடுக்க வேண்டாம். அவற்றைத் தின்று சலித்து விட்டது. இனி கரடி, புலி, சிறுத்தை, சிங்கங்களைக் கொண்டு வந்து பலி கொடுங்கள்’ எனக் கட்டளையிட வேண்டும்' என்று ஆத்தெய்வங்களிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். இப் பக்தர்கள் அவைகளைக் கொண்டுவரக் காடுகளுக்குச் செல் வார்கள். சென்றதும், அவர்களே அவ்விலங்குகளுக்குப் பலி யாகிவிடுவார்கள். கோவில்களில் நடைபெறும் பலிகள் தானாகவே நின்றுவிடும். ஜீவகாருண்யப் பிரச்சாரமும் வெற்றிபெற்று விடும். - வள்ளலார் 'உயிர்க்கொலையும், புலைப் புசிப்பும் உடையவர்களெல்லாம் உறவினத்தார் அல்லர், பிறவினத் தார்” என்று. தமது அருட்பாவில் கூறியிருக்கிறார். இதற் குப் பொருள கூறியவர்களுள் சிலர், உறவினம் பிறவினம்’ என்பதை மனித இனம் அல்லாத பிறஇனம் என்று சிலரும்: செட்டியார் முதலியார்iமுதலிய சைவ இனத்தவரல்ல, வேறு இனத்தைச் சேர்ந்தவர் என்று சிலரும் பொருள் கூறுகின்றனர்.