பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


கணங் கழுகுண்டாலும் ஒரு பயனுண்டே, என்ன பயன் கண்டிர் சுட்டீர்! எனங்கெழு சாம்பலைக் கண்டிர்-அது புன்செய் எருவுக்கும் இயலாதன்றே! 12. மூன்று தேவைகள் வள்ளலார் இறைவனிடத்தில் மூன்று தேவைகளைக் கேட்கிறார். அவை ; புண்படா உடம்பும், புரைபடா மனமும், பொய்படா ஒழுக்கமும் என்று வேண்டுகிறார். ஆந்த வேண்டுதலும், இவைகளைப் பெற்று இரவும் பகலும் கண்படாது நின்தனையே கருத்தில் வைத்து ஏத்துதற்கு என்று வேண்டுகிறார். இது அவருக்கல்ல, நமக்கு. உடம்பு புண்படாது, மனம் புரை படாது, ஒழுக்கம் பொய்படாது இருக்க வேண்டும் என்பது கருத்து. இப் பேற்றை நாமும் பெற வேண்டும் என்று அருட்பா வற்புறுத்துகிறது. 13. இறைவனை இப்பொழுதே அடையலாம் ஆம்; உடனே அடையலாம் என்று அருட்பா கூறு கிறது. இதை இது தருணம், அப்பன் வரு தருணம், அத்தன் வரு தருணம், கணவர் வரு தருணம், கைகலந்த தருணம், தழுவி நின்ற தருணம், மணவாளர் வருகின்ற தருணம், அருள் புரிந்த தருணம், அருளாளர் வருகின்ற தருணம், பதி வரும் ஓர் தருணமிது தருணமிது தோழி. சன்மார்க்கம் தலையெடுக்கப் புரிகுவது இத்தருணம் களக்கமறப் பொதுகடம் நான் கண்டுகொண்ட தருணம் பொற்சபையில் சிற்சபையில் புகுகின்ற தருணம் என்று பல இடங்களில் அருட்பா இறைவனை விரைவில் அடையும் தருணத்தை வற்புறுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, 3757, 4720, 4784 வது பாடல்கள்.